லிவ் (ரஷ்யா):ரஷ்யாவின் ராணுவம் உக்ரைனின் இரண்டாவது பெரிய நகரமான கார்கிவ்வை கைப்பற்றச் சண்டையிட்டது. இந்தச் சண்டையின்போது ரஷ்ய ராணுவத்தின் மூத்த அலுவலரான மேஜர் விட்டாலி ஜெராசிமோவ் கொல்லப்பட்டதாக உக்ரைனின் ராணுவ உளவுத்துறை தெரிவித்துள்ளது.
ரஷ்யா ராணுவத்தின் மிக முக்கிய அலுவலர்களில் விட்டாலியும் ஒருவர். இவர் சிரியாபோரில் ரஷ்யப்படை சார்பாகப் பங்கெடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. சிரியாவின் கிரிமியாவை 2014இல் கைப்பற்றியதில் இவர் முக்கியப்பங்காற்றினர். இந்த இறப்பு இன்னும் உறுதிசெய்யப்படவில்லை. ரஷ்யா, உக்ரைனின் தகவலுக்கும் கருத்து தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.