அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இதுவரை இல்லாத அளவுக்கு சரிந்துள்ளது. இன்றைய நிலவரப்படி இந்திய ரூபாயின் மதிப்பு 10 காசுகள் சரிந்து 77 ரூபாய் 78 காசுகளாக உள்ளது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பீப்பாய் ஒன்றுக்கு 125 அமெரிக்க டாலரை நெருங்கி வருவதால், ஆரம்ப வர்த்தகத்தில் இந்திய ரூபாய் மதிப்பு சரிவுடன் தொடங்கியது. கச்சா எண்ணெய் விலை உயர்வதும் மற்றும் அந்நிய மூலதனம் வெளியேறுவதாலும் தான் ரூபாய் மதிப்பு சரிந்ததற்குக் காரணம் என்று நிபுணர்கள் தெரிவித்தனர்.