மும்பை: வாரத்தின் முதல் நாளான இன்று (ஆக.22) பங்குச்சந்தைகள் சரிவுடன் தொடங்கியது. மாலையில் வர்த்தகம் முடிவில், மும்பைப் பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 872.28 புள்ளிகள் சரிந்து, 58,773 புள்ளிகளில் முடிந்தது. தேசியப் பங்குச்சந்தையில் நிஃப்டி 267.75 புள்ளிகள் குறைந்து, 17,490 புள்ளிகளில் முடிவடைந்தது.
அதேபோல் அந்நியச் செலாவணி சந்தையில், அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு சரிவுடன் தொடங்கியது. வர்த்தக முடிவில், அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு 79.84 ஆக இருந்தது.