ஸ்ரீநகர்: மக்கள் ஜனநாய கட்சி தலைவரும், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சருமான மெகபூபா முப்தி, அமலாக்கத்துறை இயக்குனரகத்துக்கு வியாழக்கிழமை (டிச.31) எழுதியுள்ள கடிதத்தில், “அமலாக்கத்துறையை ஆளுங்கட்சி, எதிர்க்கட்சிகளை வேட்டையாடும் ஒரு கருவியாக பயன்படுத்துகிறது” எனக் கூறியுள்ளார்.
ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் மெஹபூபா முப்தி அமலாக்க இயக்குநரகத்தின் இயக்குநருக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், தன்னையும், தனது குடும்பம் மற்றும் அரசியலை குறிவைக்க அமலாக்கத்துறை விசாரணை நிறுவனம் பயன்படுத்தப்படுகிறது என்று கவலை தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், “ஒரு பொறுப்புள்ள குடிமகன் மற்றும் அரசியல்வாதி, முன்னாள் முதலமைச்சர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர், மிகச் சிறந்த ஆளுமையின் மகள் என்ற வகையில், எந்தவொரு விசாரணை நிறுவனத்தின் எந்தவொரு கேள்வியையும் எதிர்கொள்ள நான் தயாராக இருக்கிறேன்.
ஆனால் இதிலுள்ள நியாயத்தன்மையை நான் வலியுறுத்துவேன். நீங்கள் எனது டிஜிட்டல் சாதனங்கள் மற்றும் எனது குடும்ப உறுப்பினர்களிடம் சோதனை நடத்த விரும்புகிறீர்கள். இதனை பக்கச்சார்பற்ற முறையில் நடத்த வேண்டும். இந்த விஷயத்தை சட்டரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் எடுத்துக்கொள்ள நான் தயங்கமாட்டேன்” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:தாயின் பெயரை மாற்றக்கோரிய மெகபூபா முப்தியின் இளைய மகள்!