தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

மண்டலி சிறையில் சலசலப்பு: 1 கைதி மருத்துவமனையில் அனுமதி; 25 பேர் காயம்! - மண்டலி சிறை

டெல்லி மண்டலி சிறையில் 50-க்கும் அதிகமான கைதிகளால் சலசலப்பு ஏற்பட்டது. ஒரு கைதி குரு தேஜ் பகதூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கைதிகள் தங்களை தாங்களே தாக்கிக் கொண்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://10.10.50.80:6060//finalout3/odisha-nle/thumbnail/28-September-2021/13195537_35_13195537_1632814583619.png
http://10.10.50.80:6060//finalout3/odisha-nle/thumbnail/28-September-2021/13195537_35_13195537_1632814583619.png

By

Published : Sep 29, 2021, 7:19 AM IST

டெல்லி:மண்டலி சிறையில் 50-க்கும் அதிகமான கைதிகளால் ஏற்பட்ட சலசலப்பு காரணமாக, குரு தேஜ் பகதூர் மருத்துவமனையில் ஒரு கைதி அனுமதிக்கப்பட்டுள்ளார். காயமடைந்த 25 கைதிகளுக்கு சிறையில் உள்ள மருந்தகத்தில் முதலுதவி அளிக்கப்பட்டது.

சிறையில் இருந்த சிசிடிவி காட்சியை பார்த்தபோது, கைதிகள் தங்களை தாங்களே காயப்படுத்திக் கொண்டது தெரியவந்தது என காவல்துறை தரப்பு தெரிவித்துள்ளது. டேனிஷ், அனிஷ் என்ற கைதிகள் சிறையை விட்டு வெளியே செல்ல விரும்பியுள்ளனர்; சிறைத்துறை அதிகாரிகள் அனுமதியளிக்க மறுத்ததால், தங்களை தாங்களே காயப்படுத்திக் கொண்டுள்ளனர்.

டேனிஷ் தான் முதலில் சலசலப்பை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. இதைப் பார்த்து மற்ற கைதிகளும் தங்களை தாங்களே காயப்படுத்திக் கொண்டுள்ளனர். டேனிஷ் மீது கொலை வழக்கு, திருட்டு வழக்கு என பல்வேறு வழக்குகள் இருப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கைதி குறித்து எந்த தகவலும் இல்லை.

இதையும் படிங்க:செய்தியாளர் வீட்டில் 15 பவுன் தங்க நகைகள், ரூ. 60 ஆயிரம் கொள்ளை

ABOUT THE AUTHOR

...view details