ஆக்ரா (உத்தரப் பிரதேசம்):உலக அதிசயங்களில் ஒன்றாகவும், காதல் சின்னமாகவும் தாஜ்மஹால் விளங்குகிறது. ஆண்டுதோறும் தாஜ்மஹாலில் உள்ள விலை மதிப்பற்ற கற்கள் காணாமல் போவதாக புகார் எழுந்தது. இந்நிலையில், தாஜ்மஹாலில் காணாமல் போன விலை மதிப்பற்ற கற்கள் குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் ஒருவர் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்துள்ள தகவல் ஆணையம், இந்திய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் தாஜ்மஹாலில் உள்ள மொசைக்குளில் காணாமல் போன விலை மதிப்பற்ற கற்களை சீரமைக்கும் பணிகள் நடைபெறுவதாக தெரிவித்துள்ளார். ஏறத்தாழ 2 கோடியே 50 லட்ச ரூபாய் மதிப்பில் புதிய கற்களை பதிக்கும் பணியை மேற்கொள்ள உள்ளதாகவும் அதற்கான டெண்டர் விடப்பட்டுள்ளதாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.