விஜயவாடா: ஆந்திர மாநிலம், விஜயவாடாவில் உள்ள பண்டிட் நேரு பேருந்து நிலையத்தில், அரசு பேருந்தை நடைபாதை அருகே உள்ள வழித்தடத்தில் நிறுத்துவதற்காக ஓட்டுநர் பிரேக் பிடித்து உள்ளார். ஆனால் பேருந்தில் பிரேக் பழுதானதாக கூறப்படுகிறது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து பிளாட்பாரத்தில் காத்திருந்த பயணிகள் மீது மோதி விபத்துள்ளானது.
நடைபாதையில் ஏறிய பேருந்து.. பெண், கைக்குழந்தை உள்பட 3 பேர் உடல் நசுங்கி உயிரிழப்பு! - பண்டிட் நேரு பேருந்து நிலையம்
RTC bus crashed into the platform: ஆந்திராவில் கட்டுப்பாட்டை இழந்த அரசு பேருந்து நடைபாதையில் ஏறிச் சென்றதால் பெண், கைக் குழந்தை உள்பட 3 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
Published : Nov 6, 2023, 11:22 AM IST
இந்த விபத்தில் நடத்துநர், பேருந்துக்காக காத்திருந்த பெண் மற்றும் கைக் குழந்தை என மூன்று பேர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் இந்த சம்பவத்தில் 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த விபத்து பிளாட்பாம் 12ல் நடந்துள்ளதாக கூறப்படுகிறது. பேருந்து மோதிய வேகத்தில் 11 மற்றும் 12 ஆம் எண் கொண்ட நடைபாதைகள் சேதமடைந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. அதற்குள் விபத்து கட்டுப்படுத்தப்பட்டதால் அதிகளவிலான உயிர் சேதம் தவிர்க்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க:புதுச்சேரி முன்னாள் சபாநாயகர் கண்ணன் மறைவு!