தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

35 ஆயிரம் இளைஞர்களை வேலைக்கு எடுக்கும் ஆர்எஸ்எஸ்.. திட்டம் என்ன?

இந்துத்துவ அமைப்பான ஆர்எஸ்எஸ் 35 ஆயிரம் இளைஞர்களை வேலைக்கு எடுக்க உள்ளது.

RSS -இல் வேலை பார்க்க  35000 இளைஞர்கள் தேர்வு- லோக்சபா தேர்தல் இலக்கு!
RSS -இல் வேலை பார்க்க 35000 இளைஞர்கள் தேர்வு- லோக்சபா தேர்தல் இலக்கு!

By

Published : May 12, 2022, 12:31 PM IST

கொல்கத்தா:நாக்பூரை தலைமையிடமாக கொண்டு செயல்படும் இந்துத்துவ அமைப்பான ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கம் (RSS) 35 ஆயிரம் உறுப்பினர்களை பணிக்கு எடுத்து வடகிழக்கு மாநிலங்களில் நடைபெறவுள்ள தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது.

வடகிழக்கு மாநிலங்கள்: 2024 மக்களவை தேர்தலை கவனத்தில் கொண்டு இவர்களுக்கு பணி வழங்கப்படவுள்ளது. அதாவது இவர்கள், மேற்கு வங்காளம், அஸ்ஸாம், திரிபுரா, சிக்கிம், அருணாச்சல பிரதேசம், மணிப்பூர் மற்றும் மிசோரம் உள்ளிட்ட 7 மாநிலங்களில் அமைப்பை வலுப்படுத்த தகவல் தொழில்நுட்ப அணியில் பணியமர்த்தப்படவுள்ளனர்.

முதற்கட்டமாக 5 ஆயிரம் தன்னார்வலர்கள் பணியமர்த்தப்படுவார்கள் என ஆர்எஸ்எஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நாக்பூரில் உள்ள அமைப்பின் தலைமையகத்தின் வழிகாட்டுதலின் பேரில் இந்த நியமனம் நடைமுறைப்படுத்தப்படும் எனத் தெரியவந்துள்ளது.

மோகன் பகவத் உத்தரவு: இங்குள்ள கேசப் பவன் (Keshab Bhavan) ஏற்கனவே வடகிழக்கு இந்தியாவில் முக்கிய கிளை அலுவலகமாக செயல்படத் தொடங்கியுள்ளது. மேலும் இந்த மாநிலங்களில் அமைப்பை பரப்பும் பணிக்காக மேற்கு வங்கத்திலும் கிளை தொடங்கி உள்ளது. இந்த அடிப்படையில், புதிய கிளைகளில் இருந்து பல்வேறு சமூகப் பணிகளை ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் செய்வார்கள்.

முக்கியமாக 2024 மக்களவை தேர்தலுக்கு முன் மேற்கு வங்கம் உள்பட வடகிழக்கு இந்தியா முழுவதும் அமைப்பை வலுப்படுத்துவதே ஆர்எஸ்எஸ்-இன் முக்கிய குறிக்கோள் என வட்டாரங்கள் கூறியுள்ளன. ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், இந்த தன்னார்வலர்களுக்கான ஆட்சேர்ப்பு பணியை 6 மாதங்களுக்குள் முடிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

மக்களவை தேர்தலே இலக்கு:2024ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றால், பிரதமர் நரேந்திர மோடி ஹாட்ரிக் வெற்றி பெறுவார் என்பது நினைவு கூரத்தக்கது.

இதையும் படிங்க:’ஏன் இந்திய சாலைகள் முகலாலய பெயர்களை சுமக்க வேண்டும்..?’ - பாஜக கேள்வி

ABOUT THE AUTHOR

...view details