தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

காசியில் ஆர்எஸ்எஸ் தலைவர்.. சாதி, தீண்டாமைக்கு எதிராக அறைகூவல்! - காசியில் ஆர்எஸ்எஸ் தலைவர்

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் காசியில் வழிபாடு செய்தார். அப்போது சாதி, சமூக தீண்டாமை உள்ளிட்ட சமூக சீர்கேடுகளுக்கு எதிராக அறைகூவல் விடுத்தார்.

Mohan Bhagwat
Mohan Bhagwat

By

Published : Mar 27, 2022, 4:42 PM IST

வாரணாசி : உத்தரப் பிரதேசத்தில் உள்ள காசிக்கு சென்றிருந்த ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், சமூக நல்லிணக்கம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு அழைப்பு விடுத்தார்.

இது குறித்து அவர் கூறுகையில், “ஆரோக்கியமான வாழ்க்கைக்கு கிராமப்புறம் மற்றும் நகர்ப்புறங்களில் தூய்மை மிகவும் முக்கியமானது.

சமூகத்தில் விழிப்புணர்வை பரப்புவதன் மூலம் சுற்றுச்சூழலை சமநிலைப்படுத்த முயற்சிக்க வேண்டும்” என்றார். இதைத் தொடர்ந்து, விவசாயம், கிராம மேம்பாட்டிற்கு ஆர்எஸ்எஸ் ஊழியர்களிடையே அவர் சிறப்பு முக்கியத்துவம் கொடுத்தார்.

இது குறித்து அவர் கூறுகையில், “தன்னார்வலர்களின் எளிமை, சிக்கனம் மற்றும் சேவை ஆகியவை சமுதாயத்திற்கு முன்மாதிரியானவை.

ஒரு சமூகத்தை அனைத்து தீமைகளிலிருந்தும் விடுவித்து நல்லிணக்கச் சூழலை உருவாக்க வேண்டும். காலங்காலமாக சமூகத்தில் பரவி வரும் சிதைவுகளை அகற்றுவதன் மூலமே சமூக நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியும்.

சாதி, சமத்துவமின்மை, தீண்டாமை போன்ற சமூக சீர்கேடுகள் கூடிய விரைவில் ஒழிக்கப்பட வேண்டும். சமூகத்தின் மனம் மாற வேண்டும். சமூக ஆணவம், தாழ்வு மனப்பான்மை இரண்டும் ஒழிய வேண்டும்” என்றார்.

இதையும் படிங்க : யாதவர்களுக்கு தனி ராணுவ பிரிவா? ஆஹிர் போராட்ட நோக்கம் என்ன?

ABOUT THE AUTHOR

...view details