கர்நாடகாவில் காலியாக இருந்த 4 மாநிலங்களவை இடங்களுக்கு நேற்று(ஜூன் 10) தேர்தல் நடைபெற்றது. இதில் பாஜக சார்பில் போட்டியிட்ட நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஜக்கேஷ், லெஹர் சிங் ஆகியோர் வெற்றி பெற்றனர். காங்கிரஸ் இரண்டு இடங்களுக்கு போட்டியிட்ட நிலையில், ஒரு இடத்தில் ஜெய்ராம் ரமேஷ் மட்டும் வெற்றி பெற்றார். நிர்மலா சீதாராமன் மற்றும் ஜெய்ராம் ரமேஷ் ஆகியோர் கர்நாடகாவிலிருந்து மீண்டும் மாநிலங்களவை உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
மாநிலங்களவை தேர்தலில் மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், பியூஸ்கோயல் வெற்றி! - ஜெய்ராம் ரமேஷ்
நடந்து முடிந்த மாநிலங்களவை தேர்தலில் மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், பியூஸ்கோயல் ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர்.
Sitharaman
இதேபோல் மகாராஷ்டிரா மாநிலத்தில் மொத்தம் உள்ள 6 இடங்களில் பாஜக 3 இடங்களில் வெற்றி பெற்றது. மகாராஷ்ட்ராவில் போட்டியிட்ட மத்திய அமைச்சர் பியூஸ்கோயல் வெற்றி பெற்றார். சிவசேனா, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் தலா ஒரு இடத்தில் வெற்றி பெற்றன.