நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கிய நாள் முதலே, மூன்று விவசாய சட்டம், பெகாசஸ் உளவு சர்ச்சை உள்ளிட்டவை குறித்து விவாதிக்கக்கோரி காங்கிரஸ் உட்பட பல எதிர்க்கட்சியினர் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வந்தனர். இதனால், நாடாளுமன்றம் பல முறை ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில், காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி, நாடாளுமன்றத்திற்கு அருகில் உள்ள கான்ஸ்டிடியூஷன் கிளப்பில் நாளை(ஆகஸ்ட்.3) காலை உணவு சந்திப்புக்கு ஏற்பாடு செய்துள்ளார். இந்த சந்திப்பில் எதிர்க்கட்சி தலைவர்கள் கலந்துக்கொள்கின்றனர்.
இதில், விவசாய சட்டம் குறித்தும், பெகாசஸ் உளவு குறித்தும் விவாதிக்கப்படும் எனக் கூறப்படுகிறது. இந்த சந்திப்பில் தேசியவாத காங்கிரஸ் கட்சி, தி.மு.க, சமாஜ்வாதி கட்சி, சிவசேனா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) உள்ளிட்ட கட்சியை சேர்ந்தவர்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இது, நாடாளுமன்ற கூட்டம் போலவே நடத்திடத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.
ராகுல் காந்தி, விவசாய சட்டங்களை வலியுறுத்தும் விதமாக, நாடாளுமன்ற கூட்டத்தொடருக்கு டிராக்டரில் வருகை தந்தார். இதுமட்டுமின்றி, பெகாசஸ் உளவு விவகாரத்தின் உண்மை தன்மையை வெளிவரவேண்டும் என தொடர்ந்து, குரல் எழுப்பி வருகிறார்.
இதையும் படிங்க:ஆறாவது திருமணம் செய்த முன்னாள் அமைச்சர்- மனைவி பகீர் புகார்!