தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

வாழை மரத்திலிருந்து விழுந்த தொழிலாளி - ரூ.4 கோடி இழப்பீடு - Rs 4 crore compensation

வாழை மரத்திலிருந்து விழுந்த தொழிலாளிக்கு நிறுவனம் ஒன்று நான்கு கோடி இழப்பீடு வழங்க ஆஸ்திரேலிய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

rs-4-crore-compensation-for-a-worker-who-fell-from-a-banana-tree
rs-4-crore-compensation-for-a-worker-who-fell-from-a-banana-tree

By

Published : Oct 12, 2021, 1:33 PM IST

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த நிறுவனத்திற்குச் சொந்தமான வாழைத் தோப்பில் 2014ஆம் ஆண்டு தொழிலாளி ஒருவர் பணி செய்துகொண்டிருந்தபோது திடீரென வாழை மரத்தில் இருந்து கீழே விழுந்துள்ளார்.

இதனால் அவருக்குப் படுகாயம் ஏற்பட்டது. இதனையடுத்து எந்த வேலையும் அவரால் செய்ய முடியாததால் அந்தத் தொழிலாளிக்கு இழப்பீடு வழங்கக் கோரி ஆஸ்திரேலிய நீதிமன்றத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு கடந்த ஐந்தாண்டுகளாக நடைபெற்றுவந்த நிலையில் தற்போது வாழை மரத்திலிருந்து கீழே விழுந்த தொழிலாளிக்கு நான்கு கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இதையும் படிங்க: மாவோயிஸ்ட் பயங்கரவாத பயிற்சி: 6 மாவட்டங்களில் என்ஐஏ அதிரடி சோதனை!

ABOUT THE AUTHOR

...view details