ஹைதராபாத்:தெலங்கானா கைத்தறி மற்றும் நெசவாளர் கூட்டுறவு சங்கத்தின் (TSCO)குடோன் ஒன்று வாரங்கல் மாவட்டத்தின் தர்மாராம் கிராமத்தில் உள்ளது. இந்தக் குடோனில் நேற்றிரவு பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இதைக் கண்ட அப்பகுதியினர், உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்ததன் பேரில் வாரங்கல், ஹனுமாகோண்டாவில் இருந்து ஆறு தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அரசின் அந்த குடோனில் ரூ. 35 கோடி மதிப்பிலான பொருள்கள் தீயில் நாசமாகியுள்ளதாக அலுவலர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். வாரங்கல் மற்றும் கரீம்நகர் என இரு மாவட்டங்களுக்கான தரைவிரிப்புகள், துண்டுகள், கம்பிளி போன்ற பல்வேறு வகையிலான துணிகள் இந்த குடோனில் சேமித்து வைக்கப்பட்டிருந்ததாகவும், அவை அனைத்தும் தீயில் எரிந்துவிட்டதாகவும் பணியாளர்கள் கூறுகின்றனர்.
காரணம் பீடி, சிகரெட்டா?:தீயணைப்புத் துறையினரின் முதல்கட்ட விசாரணையில், இந்தத் தீ விபத்து மின்கசிவு காரணமாக ஏற்படவில்லை என்பது உறுதியாகியுள்ளது. ஏனென்றால், தீ விபத்து ஏற்பட்டபோது குடோனில் மின்சாரம் விநியோகத்தில் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.