ஹைதராபாத்: கடந்த ஜூலை 6ஆம் தேதி ஹைதராபாத்தை மையமாகக் கொண்டு ரியல் எஸ்டேட் தொழில் செய்துவரும் நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.
சோதனையில், கணக்கில் வராத பரிவர்த்தனைகள் குறித்த, முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. இந்நிறுவனம் கடந்த 2018 முதல் 2019ஆம் ஆண்டு தனது நிறுவனங்களில் ஒன்றின் பெரும்பான்மை பங்குகளை, சிங்கப்பூரை சேர்ந்த ஓர் நிறுவனத்துக்கு விற்பனை செய்து அதிக வருவாய் ஈட்டியது தெரியவந்தது.
லாபத்தை மறைக்க நஷ்டக்கணக்கு
மேலும் லாபத்தை மறைப்பதற்காக சுமார் ரூ. 1, 200 கோடி மதிப்பிலான செயற்கை நஷ்டம் ஏற்படுத்தப்பட்டது கண்டறியப்பட்டது. அதுமட்டுமல்லாமல் ரூ. 288 கோடி மதிப்பில் பொய்யான வாராக் கடன் தகவல்களை குறிப்பிட்டதும் தெரிய வந்தது.