தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ.135 குறைப்பு! - No change in rates of domestic

வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ.135 குறைக்கப்பட்டு உள்ளது.

சிலிண்டர்
சிலிண்டர்

By

Published : Jun 1, 2022, 10:15 AM IST

சர்வதேச சந்தையின் கச்சா எண்ணெய் விலை, இறக்குமதி செலவு, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்துவருகின்றன.

ஒவ்வொரு மாதமும் 1ஆம் தேதி எண்ணெய் நிறுவனங்கள் புதிய விலையை நிர்ணயித்து அறிவிக்கின்றன. அந்த வகையில், இந்த மாதத்திற்கான விலை நிர்ணயம் செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி சென்னையில் 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாடு சிலிண்டர் 2 ஆயிரத்து 373 ரூபாய்க்கும், கொல்கத்தாவில் 2 ஆயிரத்து 322 ரூபாய்க்கும், டெல்லியில் 2 ஆயிரத்து 219 ரூபாய்க்கும், மும்பையில் 2 ஆயிரத்து 171 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

ஆனால் வீட்டு உபயோக சிலிண்டர் விலை எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

இதையும் படிங்க:ஆந்திராவில் கேஸ் சிலிண்டர் வெடிப்பு: 4 பேர் உயிரிழப்பு

ABOUT THE AUTHOR

...view details