கரோனா தொற்றின் இரண்டாம் அலை குறைந்துவரும் நிலையில், உலகம் முழுவதும் மெல்ல மெல்ல இயல்பு வாழ்க்கை திரும்பி வந்தது. இதனிடையே கரோனா உருமாற்றம் அடைந்து டெல்டா, டெல்டா பிளஸ் என்று மக்களிடையே பீதியை கிளப்பியது. இந்த தொற்றுகளும் ஓய்ந்த நிலையில், ஒமைக்ரான் வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது.
முகக் கவசம் கட்டாயம்; மீறினால் ரூ.100 அபராதம் - புதுச்சேரியில் ஒமைக்ரான் பரவல்
புதுச்சேரி பொதுமக்கள் கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும் என்றும் மீறினால் ரூ.100 அபராதம் விதிக்கப்படும் என்றும் காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
mask
இந்தியாவிலும் இதுவரை 200 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதியாகி உள்ளது. அப்படி மொத்தம் 13 மாநிலங்களில் ஒமைக்ரான் கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மாநில அரசுகள் மீண்டும் கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்க திட்டமிட்டுவருகின்றன. அந்த வகையில், புதுச்சேரி காவல்துறையினர், பொதுமக்கள் கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும் என்றும் மீறினால் ரூ.100 அபராதம் விதிக்கப்படும் என்றும் எச்சரிக்கவிடுத்துள்ளது.
இதையும் படிங்க:இந்தியாவில் 200ஐ எட்டிய ஒமைக்ரான்