சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு அறிவிக்கப்பட்டத்தைத் தொடர்ந்து, தேர்தல் நடத்தை விதிமுறைகள் புதுச்சேரி முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ளன. இதனால், 10 ஆயிரம் ரூபாய்க்கு மேல் பொருள்கள் எடுத்துச் செல்லக் கூடாது, வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தல், பரிசு பொருள் கொடுக்க தடை போன்ற தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறைக்கு வந்துள்ளன.
தேர்தல் நடத்தை விதிமுறைகள் கடைபிடிக்கப்படுவதை உறுதிசெய்யும் நோக்கில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை சாவடிகள் அமைத்து பறக்கும் படையினர் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், புதுச்சேரி எல்லை பகுதியான மடுகரை சோதனைச்சாவடியில் இன்று (மார்ச் 7) பறக்கும் படையைச் சேர்ந்த கண்காணிப்பு குழுவினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
புதுச்சேரியில் ரூ. 1 லட்சத்து 90 ஆயிரம் பறிமுதல்! அப்போது, சந்தேகத்திற்கிடமாக வந்த இரு சக்கர வாகனத்தை அலுவலர்கள் தடுத்து நிறுத்தினர். அதனை ஓட்டிவந்த மணிகண்டனை சோதனை செய்தபோது, அவரிடம் ரூ. 1 லட்சத்து 90 ஆயிரம் இருப்பது கண்டறியப்பட்டது. உரிய ஆவணங்கள் ஏதும் இல்லாததால் அந்த தொகையைப் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
நகர பகுதிகளில் இருந்து சட்டத்திற்கு புறம்பாக மதுபான பாட்டிகளை கடத்தலை தடுக்க பறக்கும் படையில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், இன்று முதலியார்பேட்டை காவல்நிலையத்திற்கு உட்பட்ட மரபாலம் பகுதி, கோவிந்த சாலை சந்திப்பு, மாஹே பகுதி என ஒரே நாளில் 3க்கும் மேற்பட்ட இடங்களில் மதுபான பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதையும் படிங்க :ஆந்திராவுக்கு வரும் உலகின் மிகப்பெரிய அணுஉலை!