மும்பை: ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் இருந்து மும்பை நோக்கி சென்றுக்கொண்டிருந்த ஜெய்ப்பூர் - மும்பை சென்ட்ரல் எக்ஸ்பிரஸ் ரயில், இன்று காலை சுமார் 5 மணிக்கு தஹிசார் ரயில் நிலையம் அருகே சென்றபோது ரயில்வே பாதுகாப்பு படை வீரர் சேத்தன் சிங் என்பவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் மூத்த ரயில்வே பாதுகாப்பு படை வீரர் மற்றும் மூன்று பயணிகள் உயிரிழந்தனர். மகாராஷ்டிராவில் உள்ள பால்கர் ரயில் நிலையம் அருகே நடந்த இந்த துயர சம்பவம், நாட்டையே அதிர்ச்சியிலும், அவநம்பிக்கையிலும் ஆழ்த்தி உள்ளது.
இந்த கொடூரமான செயலுக்கு காரணமான ரயில்வே பாதுகாப்புப் படையை சேர்ந்த கான்ஸ்டபிள் சேத்தன் சிங் என அடையாளம் காணப்பட்டனர். அதிகாலை 5 மணியளவில், ஓடும் ரயிலுக்குள் எதிர்பாராதவிதமாக தனது தானியங்கி துப்பாக்கியால், சரமாரியாக சுட்டு உள்ளார். துரதிர்ஷ்டவசமாக, இந்த தோட்டாக்கள் ஜெய்ப்பூரில் இருந்து மும்பை செல்லும் பயணத்தில் மற்றொரு RPF சக ஊழியர் மற்றும் மூன்று அப்பாவி பயணிகள், இந்த சம்பவத்தில் கொல்லப்பட்டனர்.
ஜூலை 31ஆம் தேதி அதிகாலை 5:23 மணிக்கு துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து காவல்துறையினருக்குத் தெரிவிக்கப்பட்டது. பாதுகாப்பு பணியில் இருந்த சி.டி.சேத்தன், தனது எஸ்கார்ட் இன்சார்ஜ் ASI டிகாராம் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியது உறுதிப்படுத்தப்பட்டது.