தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

போலீஸ் ஸ்டேசனின் அருகே பிரபல ரவுடி வெட்டிக் கொலை; குற்றவாளிகளுக்கு போலீஸ் வலைவீச்சு - போலீஸ் ஸ்டேசனின் அருகே பிரபல ரவுடி வெட்டி கொலை

புதுச்சேரியில் காவல் நிலையம் அருகே ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரவுடி வெட்டி கொலை
ரவுடி வெட்டி கொலை

By

Published : May 26, 2022, 8:13 PM IST

புதுச்சேரி கருவடிக்குப்பத்தைச் சேர்ந்தவர், பிரபல ரவுடி சரத் (எ) பொடிமாஸ்(23). இவர் இன்று மே (26) அதிகாலை 4 மணியளவில் அரியாங்குப்பம் காவல் நிலையம் பின்புறம் உள்ள அவரது மாமாவின் வீட்டில் இருந்துள்ளார்.

அப்போது திடீரென வீட்டிற்குள் புகுந்த ஒரு கும்பல் ரவுடி சரத்தை சரமாரியாக பட்டா கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் கழுத்து, தலை, முகம் உள்ளிட்டப் பகுதியில் வெட்டி கொடூரமாக தாக்கிவிட்டு படுகொலை செய்து தப்பினர். இதுகுறித்து தகவல் அறிந்த அரியாங்குப்பம் போலீசார் உடலைக் கைப்பற்றி கொலை கும்பலை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

படுகொலை செய்யப்பட்ட சரத் மீது ஏற்கெனவே கொலை, வெடிகுண்டு வீச்சு, வழிப்பறி உள்ளிட்டப் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. புதுச்சேரியில் காவல் நிலையத்தின் பின்புறம் உள்ள வீட்டிற்குள் புகுந்து ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பதற்றத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: கொலை நகரமாக மாறியதா தலைநகரம்? - குற்றப்பின்னணி - முழுவிவரம்!

ABOUT THE AUTHOR

...view details