இந்தியா - சீனா ராணுவ கமாண்டர்களின் 13வது கூட்டம், சுசூல் - மோல்டோ எல்லையில் நேற்று (அக்.10) நடந்தது. இந்தக் கூட்டத்தில் கிழக்கு லடாக் எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் மீதமுள்ள பிரச்சினைகளைத் தீர்ப்பது குறித்து இரு தரப்பினரும் ஆலோசனை மேற்கொண்டனர்.
இது குறித்து ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "எல்லைப் பகுதியில் ஏற்கனவே இருந்த நிலைப்பாட்டை சீன தரப்பினரின் தன்னிச்சையாக மாற்ற முயன்றதாலும், இருதரப்பு ஒப்பந்தங்களை மீறியதாலும் எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் பிரச்சினை எழுந்ததாக இந்திய தரப்பினர் சுட்டிக் காட்டினர்.
ஆகையால் எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியின் மேற்குப் பகுதியில் மீண்டும் அமைதியை ஏற்படுத்த சீன ராணுவத்தினர் தகுந்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது அவசியம். துஷான்பே நகரில் இருநாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர்கள் சமீபத்தில் நடத்திய கூட்டத்தில் எல்லையில் மீதமுள்ள பிரச்னைகளைத் தீர்க்க ஒப்புக் கொண்டனர்.