தமிழ்நாடு

tamil nadu

கேரள தேர்தல் பணியில் களமிறங்கிய ரோபோட்!

By

Published : Dec 11, 2020, 4:09 PM IST

கொச்சி: எர்ணாகுளம் திரிக்கக்கார நகராட்சியில் உள்ள ஒரு வாக்குச் சாவடியில் வாக்களிக்க வரும் மக்களின் வெப்பநிலையை பரிசோதிப்பது, சானிடைசர் கொடுப்பது போன்ற செயலில் ரோபோவை களமிறக்க திட்டமிட்டுள்ளனர்.

ரோபோட்
ரோபோட்

கேரளாவில் 3 கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடக்கிறது. முதல் கட்டமாக கடந்த 8-ம் தேதி திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா, ஆலப்புழா. இடுக்கி ஆகிய 5 மாவட்டங்களில் தேர்தல் நடைபெற்றது. இந்நிலையில் இன்று, இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு கோட்டயம், எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு, வயநாடு ஆகிய 5 மாவட்டங்களில் விறுவிறுப்பாக நடைபெற்றது. 3ஆவது கட்டமாக மலப்புரம், கோழிக்கோடு, கண்ணூர் மற்றும் காசர்கோடு மாவட்டங்களில் வரும் 14ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும்.16ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என அறிவித்துள்ளனர்.

எர்ணாகுளம் திரிக்கக்கார நகராட்சியில் உள்ள ஒரு வாக்குச் சாவடியில் ரோபோவை தேர்தல் அலுவலர்கள் நியமித்திருந்தனர். வாக்குகளை பதிவு செய்ய வரும் மக்களின் வெப்பநிலையை பரிசோதிப்பது, சானிடைசர் வழங்குவது போன்ற செயல்களில் ரோபோ ஈடுபட்டது. எதேனும் வாக்காளரின் வெப்பநிலை அதிகரித்து காணப்பட்டால், உடனடியாக தேர்தல் மைய அலுவலரை சந்திக்குமாறு ரோபோ அறிவுறுத்தும். இதுமட்டுமின்றி, மாஸ்க் அணிய வேண்டும், தகுந்த இடைவெளியை பின்பற்றுவது போன்ற கரோனா விதிமுறைகளை மக்களுக்கு அறிவுறுத்தும்.

இதுகுறித்து எர்ணாகுளம் மாவட்ட ஆட்சியர் எஸ்.சுஹாஸ் கூறுகையில், " சானிடைசர் இல்லாத மக்கள், இந்த ரோபோ மூலம் கையை சுத்தம் செய்துகொள்ளலாம். தற்போது, இந்த ரோபோ, ஒரு பைலட் அடிப்படையில், தான் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும், அதன் செயல்திறனை அடிப்படையாகக் கொண்டு தேர்தல் அலுவலர்களுடன் கலந்தாலோசித்து மற்ற இடங்களில் பயன்படுத்தப்படும்" என்றார்.

ABOUT THE AUTHOR

...view details