தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பாதுகாப்பு முதல் விவசாயம் வரை: மனிதர்களுக்கு சவால் விடும் ரோபோ ஷனா! - ராஜஸ்தான் எந்திரன்

பாதுகாப்பு, தீயணைப்பு, மீட்புப் பணிகள், விவசாயம் என அனைத்து துறைகளிலும் பயன்படும் வகையிலான ரோபோ ஒன்றை ஜெய்ப்பூரைச் சேர்ந்த இளைஞர் கண்டுபிடித்துள்ளார். அதன் சிறப்பம்சங்கள் குறித்தும் அதன் வடிவமைப்பு குறித்தும் ரோபோவின் கண்டுபிடிப்பாளர் ஈ டிவி பாரத் செய்தியாளரிடம் பிரத்யேகப் பேட்டி அளித்துள்ளார்.

பாதுகாப்பு முதல் விவசாயம் வரை அனைத்திற்கும் ஒரே எந்திரன்
பாதுகாப்பு முதல் விவசாயம் வரை அனைத்திற்கும் ஒரே எந்திரன்

By

Published : Nov 1, 2021, 9:49 AM IST

ஜெய்ப்பூர்: உலகின் பல்வேறு நாடுகளில் சேவை, உற்பத்தி, பாதுகாப்பு ஆகிய அனைத்து துறைகளிலும் எந்திரங்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. தவிர, அன்றாட வாழ்வையும் இயந்திரங்கள் எளிமையாக்கி உள்ளன.

தற்போது, எந்திரங்கள் தானியங்கியாக (ரோபோ) பரிணமித்துள்ள நிலையில், அவற்றின் தேவையும் அதிகரித்து வருகிறது.

அந்த வகையில், ராஜஸ்தான் தலைநகர், ஜெய்ப்பூரைச் சேர்ந்த புவ்னேஷ் மிஸ்ரா பல்நோக்கு ரோபோ ஒன்றை வடிவமைத்துள்ளார். விவசாயம், தீயணைப்பு, மீட்புப்பணி என அனைத்துக்கும் பயன்படும் வகையில் இந்த ரோபா வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த பல்நோக்கு ரோபோவுக்கு 'ஷனா 5.0' எனப் பெயரிடப்பட்டுள்ளது.

ஷனா 5.0 ரோபோ

ஷனா 5.0 சிறப்பம்சங்கள்

பல தரப்பட்ட மேற்பரப்புகளில் பயணிக்கும் ஷனா 5.0 ரோபோவின் விலை 25 லட்சம் ரூபாய். ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் இந்த ரோபோ மூன்று மணி நேரங்கள் தாக்கு பிடிக்கும் சக்தியுள்ளது. கோமரா, நெருப்பை தாங்கும் மானிட்டர்கள் போன்றவற்றை ஷனா உள்ளடக்கியுள்ளது.

ஷனாவின் தனித்துவம் என்னவென்றால், 30 செ.மீ உயரத்துக்கு ஏறவும், 250 கிலோ எடையை தூக்கவும் இதனால் முடியும். அது மட்டுமின்றி, காரை இழுக்கும் அளவுக்கு திறன் பெற்றதுதான் ஷனா 5.0. இந்த ரோபோவை மூன்றாயிரம் மீட்டர் சுற்றளவில் எங்கிருந்து வேண்டுமானாலும் ரிமோட் மூலமாக இயக்கலாம்.

தற்போது, இந்த ரோபா தீயணைப்புக்கு பயன்படுத்தும் வகையில் முக்கியத்துவம் கொடுத்து தயாரிக்கப்பட்டுள்ளது. கூடிய விரைவில் ராணுவம் போன்ற பயன்பாட்டிற்கு இந்த ரோபோ வரும் என அதன் கண்டுபிடிப்பாளர் புவ்னேஷ் தெரிவித்துள்ளார்.

காரை இழுக்கும் ஷனா 5.0

தீயணைப்பிற்கு முக்கியத்துவம்

மேலும், ஷனா 5.0 குறித்து ஈ டிவி பாரத் செய்தியாளரிடம் பேசிய புவ்னேஷ், "பல்வேறு பயன்பாடுகளுக்கு தயாரிக்கப்பட்ட இந்த ரோபோட் ’மேக் இன் இந்தியா’ திட்டத்தின்கீழ் உருவாக்கப்பட்டது. பாதுகாப்பு துறையில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். எவ்வித ஆயுதங்களை வேண்டுமானாலும் அதில் நிறுவ முடியும்.

வெடிகுண்டுகளை செயலிழக்கும் வல்லமையும் இதற்கு உள்ளது. குறிப்பாக, பேரிடர் மேலாண்மையிலும் இந்த ரோபா பயன்படும். குறுகலான தெருக்களில் தீ விபத்து ஏற்பட்டிருந்தாலும் அதை அணைக்க இந்த ரோபா பயன்படும். அது மட்டுமில்லாமல் விவசாயப் பணியில் ஈடுபடும் வகையிலும் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.

பல்வேறு மேற்பரப்புகளில் பயணிக்கும் ஷனா 5.0

சில ஆண்டுகள் முன்பு, ஜெய்ப்பூர் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனில் ஏற்பட்ட தீ விபத்தின்போது, தீயணைப்பு வீரர்களால் அந்த வெப்பத்தைத் தாங்க முடியவில்லை. இதுபோன்ற சூழலையும் இந்த ரோபாவானது தாங்கி தீயணைப்புப் பணியில் ஈடுபடும். தீயணைப்பு அமைப்பு பொருத்தப்பட்டுள்ளதால், தீ விபத்து ஏற்பட்டுள்ள பகுதிக்குச் சென்றும் தீயணைப்பு பணியில் ஷனா 5.0 ஈடுபடும்" என்றார்.

இதையும் படிங்க: இந்தியா 75: புகழ்பெற்ற ஜாமியா பல்கலைக்கழகத்தை நிறுவிய கல்வித் தந்தைகள்!

ABOUT THE AUTHOR

...view details