கிருஷ்ணகிரி மாவட்ம் ஓசூர் ஏரித்தெரு ராகவேந்திரா பகுதியைச் சேர்ந்தவர் புஷ்கர் பால் சிங் (28). இவர் அசோக் லே லேண்ட் யூனிட் 2ல் மேலாளராக பணியாற்றி வருகிறார். கடந்த 6ஆம் தேதி இரவு பாகலூர் சாலையோர கடையில் சாப்பிட சென்றார். அப்போது, அங்கு வந்த ஓசூரை சேர்ந்த இரு இளைஞர்கள் தங்களை அறிமுகம் செய்துகொண்டு பேசி பழகினர்.
மேலும் புஷ்கர் பால் சிங்கை வீட்டில் இறக்கி விடுவதாக கூறி தங்களது பைக்கில் கர்நாடகா மாநிலத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு இரு இளைஞர்களை வரவழைத்து காரில் அவரை ஏற்றி பணம் கேட்டும் புஷ்பர் பால் சிங்கை தாக்கியுள்ளனர்.