அமிர்தசரஸ்:பஞ்சாப் மாநிலம் ஜண்டியாலா பகுதியில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள சர்குலர் சாலையில் உள்ள தனியார் டிராவல்ஸ் ஏஜென்சி அலுவலகத்தில் கொள்ளையர்கள் துப்பாக்கியை காட்டி மிரட்டி ரூ.2 லட்சத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட கடைக்காரர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “நான் ஏர் டிக்கெட் மற்றும் வெஸ்டர்ன் யூனியனில் வேலை பார்க்கிறேன். மாலையில், வியாபாரத்தை முடித்துவிட்டு, பணத்தை எண்ணி கணக்கு பார்த்துக்கொண்டிருக்கும் போது, திடீரென மோட்டார் சைக்கிலில் கடைக்கு வந்த இரண்டு வாலிபர்கள், துப்பாக்கியை வைத்து மிரட்டி ரூபாய் 2 லட்சம் மேலான பணத்தை கொள்ளையடித்து சென்றனர்” என்று தெரிவித்துள்ளார்.