ஜெய்ப்பூர்(ராஜஸ்தான்): வெள்ளி கொலுசுகளைத் திருடுவதற்காக 108 வயது மூதாட்டியின் கால்களை வெட்டிய கொடூரச்சம்பவம் நேற்று (அக்.9) நடந்துள்ளது. பஷ் பதன்புரா மீனா காலனியில் வீட்டில் தனியாக இருந்த 108 வயதான ஜமுனா தேவி என்ற மூதாட்டியிடமிருந்து அவர் அணிந்திருந்த வெள்ளி கொலுசுகள் மற்றும் அவர் வைத்திருந்த தங்க பதக்கங்களை பறித்துச்செல்ல முயன்ற கொள்ளையர்கள், அவரது கால்களை வெட்டி படுகொலை செய்தனர்.
பின்னர் கோயிலிருந்து வீடு திரும்பிய அவரது மகள் ஜமுனா தேவி, இதைக்கண்டு அதிர்ச்சியடைந்தார். தொடர்ந்து சிகிச்சைக்காக, அருகிலுள்ள மருத்துவமனை ஒன்றில் துண்டிக்கப்பட்ட கால்களுடன் ஜமுனா தேவியினை அனுமதித்த நிலையில், அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கெனவே மூதாட்டி இறந்துவிட்டதாக கூறினர். தொடர்ந்து, இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் அப்பகுதியிலுள்ள சிசிடிவிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.