புதுச்சேரி: காரைக்கால் மாவட்டம் இளையான்குடி செல்லும் சாலையோரத்தில் பிறந்து இரண்டு மணி நேரமே ஆன பச்சிளம் குழந்தையை பெற்றோர் துணி மற்றும் பாலீதின் பைகளால் சுற்றி சாலையோரத்தில் தூக்கி வீசி சென்றுள்ளனர்.
பின்னர் அந்த வழியாக சென்ற சுரக்குடியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் மற்றும் அவ்வழியே சென்றவர்கள் குழந்தையை மீட்டு திருநள்ளார் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.