புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை, புயல்கள் காரணமாக பெய்த கனமழையால் சாலைகள் பழுதடைந்துள்ளன. இதனை சரிசெய்யக் கோரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடிக்கு பொதுமக்கள் புகார் அளித்தனர்.
அதன் அடிப்படையில் துணை நிலை ஆளுநர் கிரண்பேடி புதுச்சேரியில் பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் பொதுப்பணித்துறை அலுவலர்களிடம் ஆலோசனை செய்தார்.