தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

திருவிழா கொண்டாட்டத்தில் கோர விபத்து - சிறுவர்கள் உள்ளிட்ட 8 பேர் பலி

பீகாரில் சரக்கு லாரி, சாலையோரம் நின்றவர்கள் மீது மோதிய விபத்தில் 5 குழந்தைகள் உள்ளிட்ட 8 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

சாலை விபத்து
சாலை விபத்து

By

Published : Nov 21, 2022, 7:09 AM IST

சுல்தான்பூர்:பீகார் மாநிலம் சுல்தான்பூரில் உள்ள சாலையோர மரத்தடி கோவிலில் திருவிழா நடைபெற்றது. விழாவில் குழந்தைகள், பெண்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். ஆடல், பாடல் என சிறுவர்கள் மகிழ்ச்சி கொண்டாட்டத்தில் ஈடுபட்ட நிலையில், அந்த அசம்பாவிதம் அரங்கேறியது.

மஹ்னர் நோக்கி சென்ற கொண்டிருந்த கனரக சரக்கு லாரி ஒன்று திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையோர மரத்தடி கோவில் மீது மோதி விபத்துக்குள்ளானது. லாரி மோதிய விபத்தில் திருவிழா கொண்டாட்டத்தில் ஈடுபட்ட சிறுவர்கள், பெண்கள் உள்பட 8 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

மேலும் 7 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர். லாரியை சுற்றி வளைத்த மக்கள் ஓட்டுநர் தப்பிக்காத வண்ணம் பார்த்துக் கொண்டனர். சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் ஓட்டுநரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

லாரி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்த பிரதமர் மோடி, பிரதமர் நிவாரண நிதியில் இருந்து உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 2 லட்ச ரூபாயும், படுகாயம் அடைந்தவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாயும் வழங்க உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிங்க:World Children’s Day: நீலத்தில் மிளிரும் இந்தியாவின் புகழ்பெற்ற கட்டடங்கள்

ABOUT THE AUTHOR

...view details