உன்னாவ்:உத்தரப் பிரதேசத்தில் உள்ள ஆக்ரா-லக்னோ விரைவு சாலையில் கட்டுப்பாட்டை இழந்த கார் எதிரோ வந்த மற்றொரு கார் மீது நேருக்கு நேர் மோதியதில் 5 பேர் உயிரிழந்தனர். 3 படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து உன்னாவ் போலீசார் தரப்பில், ஆக்ராவிலிருந்து ஒரு குடும்பத்தை சேர்ந்த 5 பேர் எர்டிகா காரில் லக்னோ நோக்கி புறப்பட்டனர்.
இந்த கார் விரைவுச் சாலையில் சென்றுகொண்டிருக்கும்போது, திடீரென்று கட்டுப்பாட்டை இழந்தது. அதன் காரணமாக சாலையில் மறுபுறம் சென்று லக்னோவில் இருந்து ஆக்ரா நோக்கி வந்துகொண்டிருந்த எஸ்யூவி கார் மீது நேருக்கு நேர் மோதி கவிழ்ந்தது. இந்த விபத்தில் எர்டிகாவில் வந்த 1 குழந்தை உள்பட 5 பேரும் சம்பவயிடத்திலேயே உயிரிழந்தனர்.