இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட அதிநவீன விரைவு ரயிலான ’வந்தே பாரத் எக்ஸ்பிரெஸ்’, 2019ஆம் ஆண்டு பிப்ரவரியில் முதன்முதலாக இயக்கப்பட்டது. பின்னர் பல வழித்தடங்களில் இந்த வந்தே பாரத் எக்ஸ்பெரஸ் இயக்கப்பட்ட நிலையில், புதுடெல்லி-காத்ரா வழித்தடத்திற்கான வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் 2019ஆம் ஆண்டு அக்டோபர் 5ஆம் தேதி தொடங்கப்பட்டது.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இந்த சேவையைத் தொடங்கி வைத்தார். ஜம்மு காஷ்மீரின் வைஷ்னோ தேவி கோயில் யாத்திரைக்காக செல்லும் பக்தர்களின் வசதிக்காக இந்த ரயில் சேவை தொடங்கப்பட்டது.