டெல்லி:ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் லாலு பிரசாத்தின் உடல்நிலையில் முன்னேற்றம் இருப்பதாகவும், நுரையீரல் தொற்று படிப்படியாக குறைந்துவருவதாகவும் அவரது குடும்ப உறுப்பினர்களிடம் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
லாலு பிரசாத்தின் மகள் மிஷா பாரதி ஊடகங்களிடம் பேசுகையில், முன்பைவிட தனது தந்தையின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். தற்போது லாலு பிரசாத் மருத்துவர்களின் மேற்பார்வையில் தனிப்பிரிவில் வைக்கப்பட்டுள்ளார்.