டெல்லி: மாநிலங்களவையின் நேரமில்லா நேரத்தின்போது (பூஜ்ய நேரம்) ராஷ்ட்ரீய ஜனதா தளத்தின் உறுப்பினர் மனோஜ் குமார் ஜா 2021ஆம் ஆண்டு சாதிவாரி கணக்கெடுக்க கோரிக்கை விடுத்தார்.
அப்போது அவர் கூறுகையில், “மக்கள் தொகை கணக்கெடுப்புக்காக நாட்டில் கோடிக்கணக்கான ரூபாய் செலவிடப்படுகிறது. இந்தத் திட்டத்தின்படி மக்கள் தொகை பொதுவாக கணக்கெடுக்கப்படுகிறது.
மேலும் சாதிவாரி கணக்கெடுப்பில் எவ்வித பிரச்சினையும் இல்லை. ஏற்கனவே 2021ஆம் ஆண்டு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று பிரதமர் 2019இல் அறிவித்தார். அந்த வகையில் நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு 2021இல் நடத்தப்பட வேண்டும். மக்களின் சமூக நிலையை அறிந்துகொள்ள இது வழிவகுக்கும்” என்றார்.
சாதிவாரி கணக்கெடுக்க ஆர்ஜேடி கோரிக்கை! இதைத்தொடர்ந்து அவர், “உச்சநீதிமன்றத்தின் கூற்றுப்படி, இடஒதுக்கீட்டில் 50 சதவீத உச்சவரம்பைக் கருத்தில் கொள்ள வேண்டும். இதில், மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், 2021 மக்கள் தொகை கணக்கெடுப்பில், சாதிவாரி கணக்கெடுப்பு சேர்க்கப்பட வேண்டும்” என்றார்.
இதையும் படிங்க: சாதி அடிப்படையில் வேட்பாளர் தேர்வு செய்யவில்லை - மநீம பொதுச்செயலாளர்