புதுச்சேரி மாநிலம், காமராஜர் நகர் தொகுதி பாஜக வேட்பாளர் ஜான்குமாரை ஆதரித்து நடிகை கவுதமி பரப்புரை மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களுக்கு அவர் பேட்டியளித்தார். அப்போது அவர் பேசுகையில் “பரப்புரை மேற்கொள்ளும் ஒவ்வொரு இடத்திலும் நல்ல வரவேற்பு கிடைக்கிறது. இதனால் மனம் நிறைந்திருக்கிறது.
வரப்போகும் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு அமோக வெற்றி கிடைக்கும் என்ற முழு நம்பிக்கை இருக்கிறது. தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள அனைத்து வேட்பாளர்களும் அமோக வெற்றி பெறுவர். பாஜக தலைவர்களின் கொள்கைகளை பார்த்து, நமது தேசத்திற்கு ஏற்ற கட்சி பாஜக தான் என 24 ஆண்டுகளுக்கு முன் பாஜகவில் இணைந்தேன். புதுச்சேரி மக்களுக்கு நியாயமான ஆட்சியை தேசிய ஜனநாயகக் கூட்டணி அளிக்கும்.