தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

Rishabh Pant: ரிஷப் பண்ட் உடல்நிலையில் முன்னேற்றம்; ஐசியூவில் இருந்து மாற்றம்! - உத்தராகண்ட்

விபத்தில் சிக்கி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இந்திய கிரிக்கெட் அணி வீரர் ரிஷப் பண்ட ஐசியூ(Intensive care unit) வார்டில் இருந்து பொது வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

கோப்புப்படம்
கோப்புப்படம்

By

Published : Jan 2, 2023, 10:01 AM IST

டேராடூன்:இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ரிஷப் பண்ட் (25), இவர் கடந்த மாதம் 30-ஆம் தேதி அதிகாலை டெல்லியில் இருந்து சொந்த ஊரான உத்தராகண்ட் மாநிலம் ரூர்கீக்கு தனது மெர்சிடிஸ் ரக சொகுசு காரில் சென்றார். காரை அவரே ஓட்டிச்சென்ற நிலையில், டெல்லி - டேராடூன் நெடுஞ்சாலையில் ரூர்கியின் நர்சன் எல்லை பகுதியில் அதிவேகமாக சென்றபோது, சுமார் 5 மணியளவில் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவே உள்ள தடுப்பு மீது கார் மோதி விபத்துக்குள்ளானது. விபத்தில் கார் தீப்பிடித்து எரிந்தது. நல்வாய்ப்பாக கண்ணாடியை உடைத்து ரிஷப் பண்ட் காயங்களுடன் வெளியேறினார்.

இந்த விபத்தில் ரிஷப் பண்ட்டுக்கு தலை, முதுகு, காலில் பலத்த காயம் ஏற்பட்டது. அவருக்கு, டேராடூனில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், உத்தராகண்ட் முதலமைச்சர் புஷ்கர் சிங் தமி நேற்று நேரில் சந்தித்து உடல்நலம் குறித்து கேட்டறிந்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "ரிஷப் பண்ட்டை காப்பாற்றிய அரியானா போக்குவரத்துக் கழகத்தின் ஓட்டுனர் மற்றும் நடத்துனருக்கு வரும் குடியரசு தினத்தன்று (ஜன.26) உத்தராகண்ட் அரசு கவுரவம் வழங்கும்" என்று கூறினார்.

இதனிடையே, ரிஷப் பண்ட் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதால் ஐசியூ பிரிவில் சிகிச்சை பெற்று வந்த ரிஷப் பண்ட், பொதுவார்டுக்கு மாற்றப்பட்டு மருத்துவர், செவிலியர்கள் கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வருவதாக இன்று காலை (திங்கட்கிழமை) மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க:புத்தாண்டு: கோவா சென்று திரும்புகையில் நடந்த கார் விபத்தில் 4 தமிழர்கள் பலி!

ABOUT THE AUTHOR

...view details