தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஏழை மக்களுக்கு வாழ உரிமை உள்ளது - தடுப்பூசி திட்டம் குறித்து ராகுல் விமர்சனம் - தடுப்பூசி திட்டம் குறித்து ராகுல் காந்தி

தடுப்பூசி திட்டத்திற்கு இணையத்தில் பதிவு செய்வது அவசியம் என்பதை விமர்சித்து ராகுல் காந்தி ட்வீட் செய்துள்ளார்.

Rahul Gandhi
Rahul Gandhi

By

Published : Jun 10, 2021, 4:47 PM IST

இந்தியாவில் 18 வயதுக்கும் மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் திட்டம் அமலில் உள்ளது. தடுப்பூசி செலுத்திக்கொள்ள விரும்புபவர்கள் அனைவரும் கோவின்(COWIN) என்ற இணையதளத்தில் பதிவு செய்வது அவசியம். இதற்கு எதிர்க்கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இது தொடர்பாக காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், "தடுப்பூசி செலுத்துவதற்கு ஆன்லைன் பதிவு அவசியம் என்பது சரியல்ல. விரும்பும் நபர்கள் தடுப்பூசி மையத்திற்கு நேரடியாக சென்று தடுப்பூசி பெற வழிவகை செய்ய வேண்டும். இணைய வசதி இல்லாதவர்களுக்கும் வாழ உரிமை உள்ளது" என ட்வீட் செய்துள்ளார்.

தொடக்கம் முதலே அரசின் தடுப்பூசி கொள்கையை காங்கிரஸ் கட்சி விமர்சித்து வருகிறது.

இதையும் படிங்க:கரோனா பாதித்த மாமனாரை தோளில் சுமந்து சென்ற பெண்ணுக்கும் கரோனா!

ABOUT THE AUTHOR

...view details