தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கோடீஸ்வரர்கள் பட்டியலில் ஆறு பெண்கள் - கோடீஸ்வரர்கள் பட்டியலில் ஆறு பெண்கள்

ஃபோர்ப்ஸ் வெளியிட்டுள்ள முதல் 100 கோடீஸ்வரர்கள் பட்டியலில் ஆறு பெண்கள் இடம் பெற்றுள்ளனர்.

female richest person Forbes  richest person  richest women  இந்திய கோடீஸ்வரர்கள் பட்டியல்  கோடீஸ்வரர்கள் பட்டியல்  கோடீஸ்வரர்கள் பட்டியலில் ஆறு பெண்கள்  richest women in forbes list
female richest person

By

Published : Oct 8, 2021, 10:11 AM IST

இந்தியாவின் முதல் 100 கோடீஸ்வரர்கள் பட்டியலை ஃபோர்ப்ஸ் வெளியிட்டுள்ளது. இந்த கோடீஸ்வரர்கள் பட்டியலில் ஆறு பெண் தொழிலதிபர்கள் இடம்பெற்றுள்ளனர்.

இதில் ஓபி ஜிண்டால் குழுமத்தின் சாவித்ரி ஜிண்டால் (71) ரூ. 13.46 லட்சம் கோடி சொத்து மதிப்புடன் பட்டியலில் 7ஆம் இடத்தில் உள்ளார்.

இதையடுத்து ஹேவல்ஸ் நிறுவனத்தின் வினோத் ராய் குப்தா (76) பட்டியலில் ரூ. 56,782 கோடி சொத்து மதிப்புடன் 24ஆம் இடத்தில் உள்ளார்.

பின்னர் யுஎஸ்வி பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் லீனா திவாரி (43) ரூ.32,874 கோடி சொத்து மதிப்புடன் 43ஆம் இடத்தில் உள்ளார்.

பைஜூஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர் திவ்யா கோகுல்நாத் (35) பட்டியலில் 47ஆம் இடத்தில் உள்ளார். இவரது சொத்து மதிப்பு கடந்த ஆண்டில் ரூ.7,477 கோடி உயர்ந்து ரூ.30,265 கோடியாக உள்ளது.

மேலும் பயோகான் நிறுவனத்தின் கிரண் மஜூம்தார் ஷா (68) பட்டியலில் 53ஆம் இடத்தில் உள்ளார். 2020ஆம் ஆண்டு ரூ.34,375 கோடியாக இருந்த இவரது சொத்து மதிப்பு, இந்த ஆண்டில் ரூ.29,144 கோடியாகக் குறைந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து டாஃபே குழுமத்தின் மல்லிகா ஸ்ரீனிவாசன் ரூ.21,596 கோடி சொத்து மதிப்புடன் 73ஆம் இடத்தில் உள்ளார்.

இதையும் படிங்க: ஆர்யன் கானுக்கு ஆதரவு தெரிவித்த ஹிருத்திக் ரோஷன்: விளாசிய கங்கனா

ABOUT THE AUTHOR

...view details