தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

வருவாய்ப் பற்றாக்குறைக்கு மானியம்: தமிழ்நாட்டிற்கு எத்தனை கோடி வழங்கியது ஒன்றிய அரசு?

தமிழ்நாட்டிற்கு ரூ.183.67 கோடி வருவாய்ப் பற்றாக்குறை மானியத்தை ஒன்றிய அரசு விடுவித்துள்ளது. ஏழாவது தவணையாக அக்டோபர் மாதத்தில் இந்தத் தொகை வழங்கப்பட்டுள்ளது.

வருவாய் பற்றாக்குறைக்கு மானியம்
வருவாய் பற்றாக்குறைக்கு மானியம்

By

Published : Oct 12, 2021, 11:31 AM IST

தமிழ்நாட்டிற்கு ரூ.183.67 கோடி வருவாய்ப் பற்றாக்குறை மானியத்தை ஒன்றிய அரசு விடுவித்துள்ளது. இது 2021-22ஆம் நிதியாண்டில் தமிழ்நாட்டிற்கு இதுவரை வழங்கப்பட்ட மொத்தத் தொகை ரூ.1,285.67 கோடி என ஒன்றிய நிதியமைச்சகத்தின் செலவினத் துறை தெரிவித்துள்ளது.

இத்துடன் 17 மாநிலங்களுக்கு, வருவாய்ப் பகிர்வுக்குப் பிந்தைய பற்றாக்குறை மானியத்தின் ஏழாவது மாதத் தவணையும் வழங்கப்பட்டுள்ளது. இதற்கான மொத்தத் தொகை ரூ.9,871 கோடியாகும்.

இந்தத் தவணையுடன் நடப்பு நிதியாண்டில் தகுதியான மாநிலங்களுக்கு வருவாய்ப் பகிர்வுக்குப் பிந்தைய பற்றாக்குறை மானியமாக ரூ.69,097 கோடி வழங்கப்பட்டுள்ளது.

வருவாய்ப் பகிர்வுக்குப் பிந்தைய

அரசியலமைப்பின் 275ஆவது சட்டப்பிரிவுப்படி வருவாய்ப் பகிர்வுக்குப் பிந்தையப் பற்றாக்குறை மானியம் மாநிலங்களுக்கு வழங்கப்படுகிறது. வருவாய்ப் பகிர்வுக்குப் பின் மாநிலங்களின் கணக்குகளில் பற்றாக்குறையைப் போக்க 15ஆவது நிதி ஆணையத்தின் பரிந்துரைப்படி இந்த மானியம் மாதத் தவணைகளாக வழங்கப்படுகிறது.

வருவாய்ப் பற்றாக்குறைக்கு மானியம்

2021-22ஆம் நிதியாண்டில் 17 மாநிலங்களுக்கு வருவாய்ப் பகிர்வுக்குப் பிந்தைய பற்றாக்குறை மானியத்தை நிதி ஆணையம் பரிந்துரைத்துள்ளது. இதற்குத் தகுதியான மாநிலங்களை நிதி ஆணையம் முடிவுசெய்கிறது. 2021-22ஆம் நிதியாண்டில் மதிப்பிடப்பட்ட பகிர்வைக் கணக்கில்கொண்டு மாநிலத்தின் வருவாய் மற்றும் செலவுக்கு இடையேயான பற்றாக்குறை அடிப்படையில் இது முடிவுசெய்யப்படுகிறது.

மானியத் தொகை

2021-22ஆம் நிதியாண்டில் 17 மாநிலங்களுக்கு ரூ.1,18,452 கோடி வருவாய்ப் பகிர்வுக்குப் பிந்தைய பற்றாக்குறை மானியத்தை 15ஆவது நிதி ஆணையம் பரிந்துரைத்துள்ளது. இவற்றில் இதுவரை ரூ.69,097 கோடி (58.33%) வழங்கப்பட்டுள்ளது.

மத்திய நிதியமைச்சகம்

ஆந்திரா, அஸ்ஸாம், ஹரியானா, இமாச்சலப் பிரதேசம், கர்நாடகா, கேரளா, மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகலாந்து, பஞ்சாப், ராஜஸ்தான், சிக்கிம், தமிழ்நாடு, திரிபுரா, உத்தரகாண்ட், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களுக்குப் பகிர்வுக்குப் பிந்தைய வருவாய்ப் பற்றாக்குறை மானியத்தை 15ஆவது நிதி ஆணையம் பரிந்துரைத்துள்ளது.

அதிகபட்சமாக

இதில் அதிகபட்சமாக வருவாய்ப் பற்றாக்குறைக்கு மானியம் கேரளாக்கு ரூ.1657.58 கோடி, மேற்கு வங்கத்திற்கு ரூ.1467.25 கோடி, ஆந்திராவுக்கு ரூ.1438.08 கோடி, பஞ்சாபுக்கு ரூ.840.08 கோடி என வழங்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ரூ.12,000 கோடியைச் சீரழித்த பான் பராக் கறைகள் இனி உதவட்டும் சுற்றுச்சூழலுக்கு...!

ABOUT THE AUTHOR

...view details