தமிழ்நாடு

tamil nadu

முன்கூட்டிய ரிடையர்மென்ட்; தீர்வுகள் என்ன? - வல்லுநர் ஆலோசனை

By

Published : Nov 15, 2022, 6:25 PM IST

தற்போது வாழ்ந்து வரும் ஜென் - இசட் தலைமுறையினர் (1995 முதல் 2010-களின் தொடக்கத்தில் பிறந்தவர்கள்) சந்தித்து வரும் சவால்கள் குறித்தும், 50 வயது முதல் 80 வயதிற்குள் ஓய்வுபெறுவதற்கான திட்டமிடல் குறித்தும் பிரபல பங்குத்தரகர் நிதின் கமாத் சில அறிவுரைகளை வழங்கியுள்ளார்.

முன்கூட்டிய ரீடர்யன்மெண்ட்; தீர்வு என்ன?-   ஆலோசனை வழங்குகிறார் பங்குத் தரகர் நிதின் கமாத்
முன்கூட்டிய ரீடர்யன்மெண்ட்; தீர்வு என்ன?- ஆலோசனை வழங்குகிறார் பங்குத் தரகர் நிதின் கமாத்

ஹைதராபாத்: உலகம் முழுவதும் தற்போது இயங்கி வரும் ஜென் - இசட் தலைமுறையினர் வாழ்க்கை முறையால் பல சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. இனி வரும் காலத்தில் எதிர்பாராத பிரச்னைகளால் அவர்கள் பாதிக்கப்பட உள்ளனர். இது போன்ற பிரச்னைகளில் முக்கியமானது முன்கூட்டியே பெறக்கூடிய பணி ஓய்வு ஆகும்.

ஏனென்றால், தற்போது உள்ள தலைமுறையினரின் உடல் நிலைகளால் குறைந்தபட்சம் அவர்களது 50 ஆவது வயதிலேயே பணி ஓய்வு பெறக்கூடிய சூழ்நிலை ஏற்பட வாய்ப்பு உள்ளது. இன்றைய நவீன இளம்தலைமுறையினர் தவறான வாழ்க்கை முறைப்பாதையில் செல்வதால், அவர்களது இயல்பு வாழ்க்கையிலிருந்து விரைவாகவே விடைபெறும் வாய்ப்பும் உள்ளது.

இந்நிலையில் இந்த ஜென் - இசட் தலைமுறையினரின் சிக்கல்களை எளிமையாக எதிர்கொள்ள பிரபல பங்குத் தரகரும், ஜெரோதா தரகு நிறுவனத்தின் நிறுவனருமான நிதின் கமாத் சில ஆலோசனைகளை வழங்கியுள்ளார். விலை மதிப்பில்லா இந்த ஆலோசனைகள் மூலம் அனைத்து துறைகளில் உள்ளவர்களும் எளிதாக அவர்களது திட்டங்களை வகை செய்யலாம்.

இது குறித்த அவரது ட்விட்டரில் கேள்வி ஒன்றை எழுப்பியுள்ளார். அதில், " ஜென் - இசட் தலைமுறையினர் அதிகமாக சிந்திக்காத பிரச்னை என்னவென்றால் தொழில்நுட்ப முன்னேற்றம் மற்றும் மருத்துவ முன்னேற்றம் காரணமாக மனிதர்களின் ஆயுட்காலம் அதிகரித்து வருவதால், ஓய்வூதிய வயது கணிசமாக குறைந்து வருவது பற்றித்தான். தற்போது பணி ஓய்வுபெறும் வயது 60 வயதிலிருந்து 50 வயதாகவும், இதற்கு கீழும் செல்ல வாய்ப்பு உள்ளது' எனத் தெரிவித்தார்.

இதுபோன்ற முன்கூட்டிய பணி ஓய்வில் வரக்கூடிய சிக்கல்களை களைய சில ஆலோசனைகளை வழங்குகிறார். அவையாவன, 'தேவையில்லாத பொருட்களை வாங்குவதற்கு கடன் வாங்குவதை நிறுத்த வேண்டும். அதிக பலனைத் தரக்கூடியவற்றில் முதலீடு செய்ய வேண்டும். மேலும் முன் கூட்டியே சேமிக்கத் தொடங்க வேண்டும்' எனக் கூறுகிறார்.

மேலும்,'ஒரு விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தில் குடும்ப உறுப்பினர்களை இணைக்க வேண்டும். பெரும்பாலான மக்களை நிதி ரீதியாகப் பல சிக்கல்களத் தருவது எதிர்பாராத உடல்நலக் குறைவு ஆகும். இது போன்ற காப்பீட்டுத் திட்டங்கள் இதிலிருந்து விடுபட உதவுகிறது' என கமாத் தெரிவிக்கிறார்.

இதையும் படிங்க:குறுகிய கால முதலீடுகளுக்கு கூடுதல் எச்சரிக்கை தேவையா?

ABOUT THE AUTHOR

...view details