தமிழ்நாடு

tamil nadu

3 கோடி குடும்ப அட்டைகளைத் திரும்ப வழங்குக - அரசுக்கு எம்பி கோரிக்கை

By

Published : Mar 22, 2021, 7:01 PM IST

கோவிட்-19 காலத்தில் ரத்துசெய்த சுமார் 3 கோடி குடும்ப அட்டைகளை அரசு திரும்ப வழங்க வேண்டும் என மாநிலங்களவை உறுப்பினர் மனோஜ் ஜா வலியுறுத்தியுள்ளார்.

RS MP Manoj Jha
RS MP Manoj Jha

ராஷ்டிரிய ஜனதா தளம் மாநிலங்களவை உறுப்பினர் மனோஜ் ஜா கேள்வி நேரத்தின்போது பேசுகையில், "கோவிட்-19 காலகட்டத்தில் இந்தியாவே பெரும் பாதிப்பைச் சந்தித்து. இந்தச் சூழலில் பல குடும்ப அட்டைகளை ஆதாரில் இணைக்கவில்லை எனக் கூறி செல்லாது என ரத்துசெய்துள்ளது.

கிரமப்புறம், பழங்குடிகள் பகுதியில் மக்களுக்குத் தொழில்நுட்ப வசதிகள் சென்று சேராத சூழலில் இதுபோன்று நடவடிக்கை எடுப்பது முறையல்ல. எனவே, ரத்துசெய்யப்பட்ட குடும்ப அட்டைகளை மீண்டும் வழங்க வேண்டும்" என அறிவுறுத்தியுள்ளார்.

மேலும், அனைத்து மாவட்டங்களில் உணவு பாதுகாப்புச் சட்டம் முறையாக அமல்படுத்தப்படுகிறதா என ஆய்வுசெய்ய அலுவலர்களை நியமிக்க வேண்டும் எனவும் கோரிக்கைவைத்துள்ளார்.

ஏற்கனவே, இவ்விவகாரத்தில் மத்திய அரசின் நடவடிக்கைக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:மகாராஷ்டிராவில் குடியரசு தலைவர் ஆட்சி வேண்டும்: ராம்தாஸ் அத்வாலே கடிதம்

ABOUT THE AUTHOR

...view details