சர்வதேச மகளிர் தின விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக 'சர்வதேச பெண் நீதிபதிகள் தினம்' ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. அதில் உரையாற்றிய தலைமை நீதிபதி ரமணா, பெண்கள் பிரதிநிதித்துவம் குறித்து பேசினார். அவர் பேசியதாவது, இங்கு குழுமியிருக்கும் அனைவரிடமும் ஒருங்கிணைந்த, சமத்துவமான வளர்ச்சிக்கான பாதையில் நாம் செயல்பட வேண்டும் என வேண்டுகோள் விடுக்கிறேன்.
ஒருவர் தனது கனவை, இலக்கை அடைவதற்கு பாலின வேறுபாடு ஒருபோதும் தடையாக இருக்கக்கூடாது. அரசியல் அமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டுள்ள சமத்துவம் என்ற வார்த்தை நாம் உயிரோட்டத்துடன் வைத்திருக்க வேண்டும். பெண்களுக்கு அனைத்து தளங்களிலும், அனைத்து நிலைகளிலும் பிரதிநிதித்துவம் வழங்கப்பட வேண்டும்.