மகாராஷ்டிரா:மகாராஷ்டிரா மாநிலம், ராய்காட் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக கனமழை பெய்து வந்தது. இந்த நிலையில், கடந்த 19ஆம் தேதி இரவு, ராய்காட் மாவட்டத்தில் காலாபூர் அருகே இர்ஷல்வாடி என்ற மலைக்கிராமத்தில் கனமழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் அந்த கிராமத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் சிக்கிக் கொண்டனர். இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தேசியப் பேரிடர் மீட்புப் படையினர், இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
இரவு பகலாக மீட்புப் பணிகள் நடைபெற்ற நிலையில், கடந்த 21ஆம் தேதிவரை 12 பேர் சடலமாக மீட்கப்பட்டனர். 70 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். நேற்று(ஜூலை 22) மேலும் சில உடல்கள் மீட்கப்பட்டன. இதனால், நிலச்சரிவில் சிக்கி பலியானவர்கள் எண்ணிக்கை 27ஆக அதிகரித்தது. மேலும் 80-க்கும் மேற்பட்டோர் நிலச்சரிவில் சிக்கியிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. இதனால், மாயமானவர்களைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வந்தது. கிராம மக்கள், மீட்புப் படையினர், தன்னார்வலர்கள் என ஏராளமானோர் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். நேற்று இரவு மோசமான வானிலை காரணமாக மீட்புப் பணியில் சுணக்கம் ஏற்பட்டது.
இந்நிலையில், இர்ஷல்வாடி கிராமத்தில், நான்காவது நாளாக இன்று(ஜூலை 23) மீட்புப் பணிகள் தொடங்கியுள்ளன. பேரிடர் மீட்புப் படை வீரர்கள் மாயமானவர்களைத் தேடி வருகின்றனர். இது தொடர்பாக மீட்புப் படை அதிகாரிகள் கூறும்போது, "இந்த நிலச்சரிவில் அப்பகுதியில் இருந்த 48 வீடுகளில் 17 வீடுகள் நிலச்சரிவில் சிக்கி இடிந்து விழுந்தன. நேற்று இரவு மழை காரணமாகவும், பனிமூட்டமாக இருந்ததாலும், மீட்புப் பணிகள் நிறுத்தபட்டன.