தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

'காசு எதுக்கு கையில நிக்காது!' புதுச்சேரி CM-யிடம் பெண்கள் வைத்தக் கோரிக்கை - புதுச்சேரி பெண்கள் வைத்தக் கோரிக்கை

'காசு எதுக்கு கையில நிக்காது! ரேசன் கடையில் பொருட்கள் வழங்குகள்' என புதுச்சேரி பெண்கள் வைத்தக் கோரிக்கைக்கு நடவடிக்கை எடுப்பதாக அம்மாநில முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat

By

Published : Dec 26, 2022, 10:46 PM IST

'காசு எதுக்கு கையில நிக்காது!' புதுச்சேரி CM-யிடம் பெண்கள் வைத்தக் கோரிக்கை

புதுச்சேரியில் குடிமை பொருள் வழங்கல் துறை மூலமாக சுமார் 200-க்கு மேற்பட்ட ரேஷன் கடைகள் செயல்பட்டன. இவற்றின் மூலம் கடந்த பல வருடங்களாக அரசி, கோதுமை, சமையல் எண்ணெய் உள்ளிட்டவை பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டு வந்தது. பின்னர், ரேஷன் பொருட்களுக்கு பதில் அவரவர் வங்கி கணக்கில் அதற்கான பணம் செலுத்தப்பட்டு வந்தது. இதற்கிடையே பல்வேறு காரணங்களால் கடந்த சிலஆண்டுகளுக்கு முன்பு ரேஷன் கடைகள் மூடப்பட்டன.

இந்நிலையில் இன்று (டிச.26) மாலை முதலமைச்சர் ரங்கசாமி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று விட்டு தனது வீட்டுக்கு கார் மூலம் திரும்பினார். அப்போது, அங்கு அவரை காண காத்திருந்த பெண்கள் முதலமைச்சருக்கு வணக்கம் தெரிவித்தனர். இதனைத்தொடர்ந்து, உடனே காரை நிறுத்திய முதலமைச்சரும் அவர்களிடம் பேசினார்.

'ஐயா உடனே மூடப்பட்டுள்ள ரேஷன் கடைகளை திறந்து பொருள்களாக வழங்க நடவடிக்கை எடுங்கள்' என்றனர். அதற்கு 'அதான் பணமாக வங்கி மூலம் செலுத்தப்படுகிறதே' என்றார், முதலமைச்சர். 'ஆமாம். பணம் வேண்டாம் பொருட்கள் பழைய படி தாருங்கள்; அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் வழங்க நடவடிக்கை எடுங்கள்' எனக் கோரிக்கை வைத்தனர். அதற்கு அவர் நடவடிக்கை எடுக்கப்படும் என பதிலளித்து அங்கிருந்து புறப்பட்டார்.

இதையும் படிங்க: ஆதி திராவிடர் விடுதிக்கு செலவிடாதது ஏன்? - அண்ணாமலை கேள்வி

ABOUT THE AUTHOR

...view details