தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளை செயல்படுத்த உரிய நடவடிக்கை எடுங்க - புதுச்சேரி அதிமுக - புதுச்சேரி அண்மைச் செய்திகள்

கிடப்பில் போடப்பட்ட ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளை செயல்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமிக்கு, அதிமுக சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி அதிமுக
புதுச்சேரி அதிமுக

By

Published : Jul 29, 2021, 3:23 PM IST

புதுச்சேரி: ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் குறித்து முதலமைச்சர் ரங்கசாமியை சட்டப்பேரவை வளாகத்தில் சந்தித்து, புதுச்சேரி கிழக்கு மாநில அதிமுக செயலாளர் அன்பழகன் இன்று (ஜூலை 29) மனு அளித்தார்.

அதில், “புதுச்சேரி மாநிலத்தில் கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சுற்றுலாவை மேம்படுத்தல், மக்களின் அடிப்படை வசதிகள், உள்கட்டமைப்பை சரி செய்யும் பல்வேறு திட்டங்களை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.

அடுக்கு மாடி, சுற்றுலா திட்டங்களை நிறைவேற்றுக

அதன் அடிப்படையில் உப்பளம் தொகுதி டாக்டர். அம்பேத்கர் நகர் ஆட்டுப்பட்டியில், தாழ்த்தப்பட்ட மக்களுக்காக அடுக்குமாடி வீடு கட்ட ரூ. 18 கோடியும், சுற்றுலாவை மேம்படுத்த கடற்கரை சாலையில் இருந்து, வம்பாகீரபாளையம் லைட் ஹவுஸ் பகுதியில் அமைந்துள்ள பாண்டி மெரினா பீச் வரை, சுமார் ரூ. 6 கோடி செலவில் புதிய நடை பாதையும் அமைக்க திட்டமிடப்பட்டது.

அதேபோல் டாக்டர் அம்பேத்கர் சாலையிலிருந்து, பாண்டி மெரினா பீச்சுக்கு சுமார் ரூ. 5 கோடி மதிப்பிலான புதிய சாலை ஏற்படுத்தவும் திட்டமிட்டு, நிதி ஒதுக்கீடு செய்து அனுமதி அளிக்கப்பட்டது.

ஆனால், உப்பளம் தொகுதி அதிமுக தொகுதி என்ற காரணத்தினால், மேற்கூறிய திட்டங்களை செயல்படுத்தாமல், கடந்த காங்கிரஸ் ஆட்சியில் வேண்டுமென்றே காலதாமதம் செய்யப்பட்டது. மக்களின் நலனுக்காகவும், சுற்றுலாவை மேம்படுத்தவும் மேற்கூறிய பணிகளை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் மூலம் செயல்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:பெகாசஸ் விவகாரம்: மம்தா பானர்ஜிக்கு சிவசேனா பாராட்டு!

ABOUT THE AUTHOR

...view details