விவசாயிகளின் வேளாண் சட்ட எதிர்ப்பு போராட்டத்தின் ஒரு அங்கமாக குடியரசு தினத்தன்று டிராக்டர் பேரணி நடத்தப்பட்டது. ஆனால், அதில் வன்முறை வெடிக்க காவல்துறையினர் விவசாயிகள் என பலர் படுகாயம் அடைந்தனர். போராட்டத்தை தூண்டும் விதமாக ட்விட்டரில் கருத்து பதிவிட்டதாகக் கூறி காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர், மூத்த பத்திரிகையாளர் ராஜ்தீப் சர்தேசாய் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
வன்முறை தூண்டியதாக தேச துரோக வழக்கு: உச்ச நீதிமன்றம் சென்ற சசி தரூர், ராஜ்தீப் சர்தேசாய்! - ராஜ்தீப் சர்தேசாய்
டெல்லி: விவசாயிகளின் போராட்டத்தை தூண்டியதாக சசி தரூர், ராஜ்தீப் சர்தேசாய் உள்ளிட்டவர்கள் மீது பல்வேறு பிரிவுகளின் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அவற்றை எதிர்த்து அவர்கள் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
உச்ச நீதிமன்றம்
கடந்த ஜனவரி 30ஆம் தேதி, தேச துரோகம் உள்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் டெல்லி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். அவர்களுக்கு எதிராக மத்தியப் பிரதேச காவல்நிலையத்திலும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், தங்கள் மீது பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கைக்கு எதிராக பத்திரிகையாளர்கள் மிருனல் பாண்டே, தோஃபர் ஆகா, பரேஷ் நாத், அனந்த் நாத் உள்பட ஏழு பேர், உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.