தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ரூ.25 லட்சம் தங்கத்தால் ஆன பட்டம்.. மீரட் நகை வியாபாரியின் ஆசை! - உத்தரபிரதேசம்

உத்தரபிரதேசத்தின் மீரட்டை சேர்ந்த கோடீஸ்வர நகை வியாபாரி ஒருவர் ரூ.25 லட்சம் மதிப்பிலான தங்கத்தில் செய்யப்பட்ட பட்டத்தை காட்சிப்படுத்தியுள்ளார்.

Republic Day Celebration: 25 லட்சம் மதிப்பிலான தங்க பட்டத்தை காட்சிப்படுத்திய வியாபாரி
Republic Day Celebration: 25 லட்சம் மதிப்பிலான தங்க பட்டத்தை காட்சிப்படுத்திய வியாபாரி

By

Published : Jan 23, 2023, 10:38 PM IST

மீரட் : நாடு இந்த ஆண்டு 74வது குடியரசு தினத்தையும், பசந்த பஞ்சமி பண்டிகையையும் ஒரே நாளில் கொண்டாடுகிறது. இந்த அரிய நிகழ்வைக் குறிக்கும் வகையில், உத்தரப்பிரதேசத்தின் மீரட்டில் ஒரு நகைக்கடைக்காரர் தங்கத்தால் செய்யப்பட்ட பட்டத்தைக் காட்சிப்படுத்தியுள்ளார். இந்த பட்டம் மட்டுமல்லாமல் அதன் மாஞ்சா மற்றும் சார்க்கியும் தங்கத்தால் ஆனது.

400 கிராமிற்கு மேல் எடையுள்ள தங்கத்தால் செய்யப்பட்ட இந்த பட்டத்தின் விலை ரூ.25 லட்சம் ஆகும். இதை 7 கைவினை கலைஞர்கள் 16 நாள் உழைப்பில் உருவாக்கியுள்ளனர். மீரட்டின் கோடீஸ்வர வியாபாரி அங்கூர் ஜெயின், தங்க ஆபரணங்கள் மூலம் புதிதாக எதாவது செய்வதில் ஆர்வமுள்ளவர். இந்த காத்தாடி குறித்து , “இந்தக் காத்தாடியை உருவாக்குவதன் மூலம், பறவைகள் மற்றும் சூழலியலுக்கும் தீங்கு விளைவிக்கும் சந்தைகளில் கிடைக்கும் சீன மாஞ்சாவுக்கு எதிராக எனது அடையாளப்பூர்வ எதிர்ப்பைப் பதிவு செய்ய விரும்புகிறேன்" என்று அங்கர் ஜெயின் கூறினார்.

20 மீட்டர் தங்க மாஞ்சாவுடன் இணைக்கப்பட்ட இந்த தங்கக் பட்டம் தற்போது காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. இந்த காஸ்ட்லி பட்டம் பறக்குமா என்பதை அறிய பொதுமக்கள் ஆர்வமாகப் பார்வையிட்டுச் செல்கின்றனர். அவர்களுக்கு அங்கூர் ஜெயின் மற்றும் குடும்பத்தினர் மாஞ்சா பிடித்து பட்டம் பறப்பது போல் நடித்து காட்டுகின்றனர்.

காஸ்ட்லி பட்டத்தை பார்வையிட பொதுமக்கள் ஆர்வம்

அங்கூர் ஜெயின் இந்த பட்டத்தை கின்னஸ் புத்தகம், இந்தியன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் மற்றும் ஆசியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் ஆகியவற்றில் பதிவு செய்ய காத்துக்கொண்டிருக்கிறார். இந்த பட்டம் தான் உலகிலேயே விலை உயர்ந்தது என்று அங்கூர் ஜெயின் கூறியுள்ளார். அவர் கூறும் தகவல்களை நிரூபிப்பதற்கான சரியான ஆதாரங்கள் கிடைக்கவில்லை. இருப்பினும் தங்கத்தால் ஆன இந்த பட்டத்தைப் பார்க்க பொதுமக்கள் வெகுவாக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இதையும் படிங்க: வீடியோ: பிரீ வெட்டிங் போட்டோ ஷூட்.. படகோட்டியின் போஸ் அட்வைஸ்..

ABOUT THE AUTHOR

...view details