டெல்லி: பார்கின்சன் நோயால் அவதிப்பட்டு வந்த கீதாஞ்சலி ஐயர் உடல்நலக்குறைவால் நேற்று (ஜூன் 7) காலமானார். இவர் இந்தியாவில் பிரபலமான ஆங்கில பெண் தொகுப்பாளர்களில் ஒருவர் மற்றும் விருது பெற்ற தொகுப்பாளினியும் ஆவார். நடைப்பயிற்சி முடித்து வீடு திரும்பிய பின் உயிர் இழந்ததாக அவரின் நெருங்கிய நண்பர் கூறினார்.
கீதாஞ்சலி ஐயர், தேசிய நாடகப் பள்ளியில் (என்எஸ்டி) டிப்ளமோ மற்றும் கொல்கத்தாவின் லொரேட்டோ கல்லூரியில் பட்டம் பெற்றுள்ளார். 1971ல் தூர்தர்ஷனில் இணைந்த இவர், நான்கு முறை சிறந்த தொகுப்பாளருக்கான விருதையும் பெற்றுள்ளார். மற்றும் 1989ல் சிறந்த பெண்களுக்கான இந்திரா காந்தி பிரியதர்ஷினி விருதையும் வென்று உள்ளார்.
செய்தி நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்குவது மட்டும் இல்லாமல், பல அச்சு விளம்பரங்களில் அவர் தன்னை வெளிப்படுத்திப் பிரபலமான பெண்ணாக இருந்துள்ளார். தன்னை பன்முக கலைஞராகவும், தன்னம்பிக்கையுடன் பல வேலைகளிலும் ஈடு காட்டியுள்ளார்.
கீதாஞ்சலி ஐயர் ஸ்ரீதர் க்ஷிர்சாகரின் தொலைக்காட்சி நாடகமான "கந்தான்"விழும் நடித்து பிரபலம் ஆனார். அவர் தனது வாழ்நாளில் புகழ்பெற்ற கலைஞராக இருந்துள்ளார். சமூக சேவையில் ஆர்வம் கொண்ட கீதாஞ்சலி ஐயர் பல சமுக அமைப்புடன் இனைந்து மக்கள் மற்றும் உயிரினங்களுக்கு உதவி புரிந்துள்ளார். உலக வனவிலங்கு நிதி (WWF) அமைப்புடன் தொடர்புடையவர்.