தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

தொலைநோக்கு விதைகளை விதைத்த 'செஞ்சுரி நாயகர்' நரசிம்ம ராவ்!

மறைந்த முன்னாள் பிரதமர் பி.வி. நரசிம்மராவ் இந்தியாவில் எவ்வாறு வெற்றிகரமாக, பொருளாதார மாற்றங்களைக் கொண்டு வந்தார் என்பது குறித்து யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. அவரது 100ஆவது பிறந்த நாள் நேற்று(ஜூன் 28) கொண்டாடப்பட்டது. அவரது 100ஆவது பிறந்த ஆண்டில், ஈடிவி பாரத் ஊடகம் நரசிம்ம ராவை நினைவுகூர்ந்து மரியாதை செலுத்துகிறது.

நினைவுகூரப்படக்கூடிய மாற்றியமைக்கப்பட்ட இந்தியாவின் பிரதமர் நரசிம்ம ராவ்!
நினைவுகூரப்படக்கூடிய மாற்றியமைக்கப்பட்ட இந்தியாவின் பிரதமர் நரசிம்ம ராவ்!

By

Published : Jun 29, 2021, 1:28 PM IST

Updated : Jun 29, 2021, 2:13 PM IST

இந்திய வரலாற்றில் 1991ஆம் ஆண்டு கொந்தளிப்பான கட்டமாக இருந்தது. தேர்தல் பரப்புரைக்கு தமிழ்நாட்டின் ஸ்ரீபெரும்புதூருக்கு வந்து இருந்த அன்றைய பிரதமர் வேட்பாளர் ராஜிவ் காந்தி, குண்டுவெடிப்பில் படுகொலை செய்யப்பட்டார். அப்போது காங்கிரஸ் கட்சி முக்கியத்தலைமை இல்லாமல் வெற்றிடமானது.

இதையடுத்து பிரதமர் யார் எனும் கேள்விஎழுந்தது. காங்கிரஸின் அடுத்த அரசியல் வாரிசாகப் பார்க்கப்பட்ட சோனியா பக்கம் அனைவரும் திரும்ப, அதனை சோனியா, தனது மகன் ராகுல் காந்தியின் வற்புறுத்தலால் மறுத்துவிட்டார்.

தேசிய அரசியலில் ஏற்பட்ட சலசலப்பு

அப்போது ஏற்பட்ட மிகச்சிறந்த அரசியல் சலசலப்புகளுக்கு இடையே நாட்டின் அடுத்த பிரதமர் என்னும் கவசத்தை ஏற்கப்போவது யார் என்பது குறித்த விவாதங்களும் மக்கள் பணியாற்றும் 10 தலைவர்களின் பெயர்களும் அடிபடத் தொடங்கின.

அவ்வாறு தேர்வு செய்யப்படுபவர்கள் ராஜிவ் காந்தியின் குடும்பத்திற்கு மிக நெருக்கமானவர்களாகவும், காங்கிரஸின் மூத்த முன்னோடித் தலைவர்களாகவும் இருக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சியினர் பிரதமர் வேட்பாளர் குறித்த தகுதிகளை வரையறுக்கத் தொடங்கினர்.

சோனியாவால் அறிவிக்கப்பட்ட நரசிம்ம ராவ்

பல்வேறு கலந்துரையாடல்கள் நிகழ்ந்த ஒரு வாரத்திற்குப் பிறகு, சோனியா காந்தி பி.வி.நரசிம்ம ராவை, காங்கிரஸ் கட்சியின் தலைவராக நியமித்து, பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தி வெற்றியும் பெற்றார்.

ஏனெனில், இந்திரா காந்தி மற்றும் ராஜிவ் காந்தியின் அமைச்சரவையில் பல முக்கியப் பொறுப்புகளைப் பெற்றவர் எனவும்; புத்திசாலித்தனமான காங்கிரஸ் அரசியல்வாதி எனவும் அப்போது பி.வி. நரசிம்ம ராவுக்கு நற்பெயர்கள் இருந்ததால், மார்ச் 1992ஆம் ஆண்டு பிரதமர் ஆனார்.

நேரு குடும்பத்தைச் சாராத முதல் பிரதமர்

நேரு குடும்பத்தைச் சாராத ஒரு நபர், முதல்முறையாகப் பிரதமரானது அதுவே முதல் முறை. அந்த பதவிக்காலத்தை முழுமையாக முடித்ததிலும் அவரே முதல் முறை.

நரசிம்ம ராவின் இளமைக்காலம்

தற்போதைய தெலங்கானா மாநிலத்தின் கரீம் நகரில் ஓர் பிரமாண குடும்பத்தில் ஜூன் 28ஆம் 1921ஆம் ஆண்டு பிறந்தவர், நரசிம்ம ராவ். அவருக்கு நெருக்கமானவர்களால் செல்லமாக 'பி.வி' என அழைக்கப்படுகிறார்.

முழுநேர காங்கிரஸ்வாதியான நரசிம்ம ராவ், இந்திய சுதந்திரப் போராட்டத்தில் முழுமையாக பங்கெடுத்துப் போராடினார். பெரும்பான்மையான நேரங்களில் மகாத்மா காந்தி, நேரு, லால் பகதூர் சாஸ்திரி ஆகியோரால் உந்தப்பட்டு, சுதந்திரத்திற்கான செயல்பாட்டை முன்னெடுத்து இருக்கிறார்.

பத்திரிகையாளராக மெருகேறிய நரசிம்ம ராவ்

தனது இளமைக்காலத்தில் படிப்பினை முடித்தபின், தனது உறவினருடன் சேர்ந்து 'ககதியா பத்திரிகா'என்னும் இதழை தெலுங்கு மொழியில் நடத்தினர். இதன்மூலம், சமூகம் மற்றும் அரசியல் பிரச்னைகள் குறித்த விமர்சனக் கட்டுரைகளை நரசிம்ம ராவ் எழுதினார்.

அரசியலில் உச்சம்தொட்ட நரசிம்ம ராவ்

1957இல் ஆந்திரப்பிரதேச அரசியலில் களமிறங்கிய நரசிம்ம ராவ், பல்வேறு சோதனைகளைக் கடந்து 1971ஆம் ஆண்டு அம்மாநிலத்தின் முதலமைச்சர் ஆனார். 1969 காலகட்டத்தில் காங்கிரஸில் பல்வேறு பிரிவுகள் உருவாகின. அப்போதும், நரசிம்மராவ் இந்திரா காந்தியை மிகவும் தீவிரமாக ஆதரித்தார்.

அரசியலில் சாணக்கியர்

நரசிம்ம ராவுக்கு மிகச்சிறந்த அரசியல் பதவிகளைத்தூக்கி சுமப்பது ஒரு சாதாரண விஷயம் அல்ல. காங்கிரஸில் நரசிம்ம ராவைப் பிடிக்காதவர்கள் சிலர் இருந்தனர். ஆரம்ப கட்டத்தில் காங்கிரஸ் மூத்த ஒன்றிய அமைச்சர்களாக இருந்த அர்ஜூன் சிங், சரத் பவார், என்.டி.திவாரி ஆகியோர், நரசிம்ம ராவுக்கு எதிராக சதித் திட்டங்களில் ஈடுபட்டதாக ஒரு பேச்சு உண்டு.

ஆனால், நரசிம்ம ராவுக்கு அதைச் சமாளிக்கும் அரசியல் நன்கு தெரிந்திருந்தது. அத்தகைய அரசியலில் அவ்வாறு நிற்பது சாதாரண விஷயம் கிடையாது. நரசிம்ம ராவ் தனது எதிரிகளை அவர்களது பாணியிலேயே கையாண்டு, அவர்களது பாணியிலேயே மருந்தளித்து, அவரை கீழே விழ வைத்தார்.

நரசிம்ம ராவ் தீவிர அரசியலில் இருக்கும்போதுபல சிக்கல்கள் இருந்தன. அவரது கையில் பொருளாதாரப் பற்றாக்குறை, உள்நாட்டுப் பாதுகாப்பு, காஷ்மீர், வன்முறை கிளர்ச்சிகள் மற்றும் வெளிப்புற அச்சுறுத்தல்கள் இருந்தன. அதை பிரதமர் ஆனபோது எதிர்த்து நின்று சமாளித்தார்.

பாதி சிங்கம் நரசிம்ம ராவ்: பிரின்ஸ்டைன் பல்கலைக்கழக அறிஞர் வினய் சீதாபதி, பி.வி.நரசிம்ம ராவ் எவ்வாறு இந்தியாவை மாற்றியமைத்தார் என எழுதியிருப்பார். குறிப்பாக, தனது மக்களால் நேசிக்கப்படாவிட்டாலும், தனது கட்சியால் அவநம்பிக்கை அடைந்தாலும், 10 நபர்களின் நிழலில் ஆட்சி செய்தாலும், நரசிம்ம ராவ் பொருளாதாரத்தை மாற்றி, இந்தியாவை உலகளவில் கொண்டுபோய் சேர்த்தார்.

எதிர்க்கட்சியினரையும் அரவணைக்கும் ராஜதந்திரம்

அவர் ஒரு புத்திசாலித்தனமான அரசியல்வாதியாக இருந்தார். அவர் திறமைகளை ஒப்புக் கொண்டார் மற்றும் மரபுகளை உடைப்பதில் தயங்கவில்லை.

ஒரு அரசியல் சாரா பொருளாதார நிபுணர் மன்மோகன் சிங்கை நிதியமைச்சராக நியமித்தார் (பின்னர் சிங் பிரதமரானார்). எதிர்க்கட்சி உறுப்பினரான சுப்பிரமணியன் சுவாமியை தொழிலாளர் தரநிலைகள் மற்றும் சர்வதேச வர்த்தக ஆணையத்தின் தலைவராக நியமித்தார். மேலும் எதிர்க்கட்சித் தலைவர் அடல் பிஹாரி வாஜ்பாயை ஜெனீவாவில் நடந்த ஐ.நா. கூட்டத்தில் இந்தியாவின் பிரதிநிதியாக பங்கேற்க அனுப்பிவைத்தார்.

அவரது ஆட்சிக் காலத்தில் இந்தியா முன்னேற்றம் அடைந்தபோதிலும், 1996 பொதுத்தேர்தலில் காங்கிரஸ் தோல்வியடைந்தது. சோனியா காந்தியின் ஆதரவாளர்கள் நரசிம்ம ராவை காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலகுமாறு கட்டாயப்படுத்தினர்.

பின்னர் நரசிம்ம ராவ் தேசிய அரசியலில் இருந்து ஓய்வு பெற்று, 'தி இன்சைடர்' என்னும் புத்தகத்தை எழுதி வெளியிட்டார். இது இந்திய அரசியலின் அணிகளில் ஒரு மனிதனின் எழுச்சியை விவரித்தது.

அத்தகைய சிறப்புமிக்க நரசிம்ம ராவ், டிசம்பர் 9, 2004 அன்று மாரடைப்பு ஏற்பட்டு, அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவர் 14 நாட்களுக்குப் பிறகு, சிகிச்சைப் பலனின்றி, தனது 83 வயதில் இயற்கை எய்தினார்.

நரசிம்ம ராவைப் பொறுத்தவரை அவர் ஒரு சீர்திருத்தவாதி, கல்வியாளர், அறிஞர், 15 மொழிகளில் உரையாடுபவர் மட்டுமல்ல. அவர் ஓர் அறிவுசார் பங்களிப்பு என்றால் அது மிகையல்ல!

இதையும் படிங்க: கட்டணக் கொள்ளையில் ஈடுபடும் தனியார் மருத்துவ ஆய்வகங்கள் - அரசு தலையிட வேண்டுகோள்!

Last Updated : Jun 29, 2021, 2:13 PM IST

ABOUT THE AUTHOR

...view details