தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஊழியர்களுக்கான கரோனா தடுப்பூசி செலவை ஏற்றுக் கொள்ளும் ரிலையன்ஸ்

மும்பை: தங்கள் நிறுவன பணியாளர்களுக்கும் அவர்களின் குடும்பத்தினருக்கும் கரோனா தடுப்பூசி போடுவதற்கான செலவை ரிலையன்ஸ் நிறுவனம் ஏற்றுக்கொள்வதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Reliance
அம்பானி

By

Published : Mar 5, 2021, 5:06 PM IST

நாடு முழுவதும் கரோனா தடுப்பூசி விநியோகிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக, முன்களப்பணியாளர்களுக்குத் தடுப்பூசி போடப்பட்டு வந்தது. தற்போது, இரண்டாவது கட்டமாக, 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கும், 45 வயதுக்கு மேலான இணை நோயால் பாதிப்படைந்தவர்களுக்கும் கரோனா தடுப்பூசி போடப்படும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ரிலையன்ஸ் நிறுவனம், தங்கள் நிறுவன பணியாளர்களுக்கும் அவர்களின் குடும்பத்தினருக்கும் தடுப்பூசி போடுவதற்கான செலவை ஏற்றுக்கொள்வதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து ரிலையன்ஸ் நிறுவனர் நீத்தா அம்பானி பணியாளர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், "ரிலையன்ஸ் நிறுவனம் உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்குமான தடுப்பூசி செலவை ஏற்கிறது. உங்கள் குடும்பத்தின் நலன் எங்களின் பொறுப்பாகும். நீங்கள் ரிலையன்ஸ் குடும்பத்தின் ஒரு பகுதி.

உங்களின் ஆதரவு இருந்தால் நிச்சயம் கரோனா தொற்றை விரட்டிட முடியும். அதுவரை, உங்களின் பாதுகாப்பு முக்கியம். போரின் கடைசிக் கட்டத்தில் உள்ளோம். நாம் ஒன்றாக இணைந்து வெல்வோம். அனைவரும் விரைவாக அரசின் கோவிட் தடுப்பூசி திட்டத்தில் பதிவு செய்திட வேண்டும்" எனக் கூறியுள்ளார்.

இதையும் படிங்க:'18 மாநிலங்களில் கரோனாவால் உயிரிழப்பு இல்லை'

ABOUT THE AUTHOR

...view details