தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

விவசாயிகள் விரோத நடவடிக்கைகளில் ஈடுபடமாட்டோம் - ரிலையன்ஸ் - national news in tamil

உணவுப் பொருள்களை விவசாயிகளிடமிருந்து நேரடியாகக் கொள்முதல் செய்வதில்லை என்றும் குறைந்தபட்ச ஆதார விலை என்பதை அவசியம் கடைப்பிடிக்குமாறும் விநியோகஸ்தர்களிடம் அறிவுறுத்தியிருப்பதாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தெரிவித்துள்ளது.

Reliance says it has nothing to do with farm laws
Reliance says it has nothing to do with farm laws

By

Published : Jan 4, 2021, 1:42 PM IST

மும்பை:ஒப்பந்த விவசாயத்தில் ஈடுபடும் எந்தத் திட்டமும் இல்லை, எந்த ஒரு விவசாய நிலத்தையும் வாங்கப்போவதும் இல்லை என்று ரிலையன்ஸ் நிறுவனம் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

பஞ்சாப், ஹரியானா மாநில உயர் நீதிமன்றத்தில், ரிலையன்ஸ் கைப்பேசி கோபுரங்கள் மீதான தாக்குதல்கள் குறித்து வழக்குத் தொடர்ந்திருக்கும் ரிலையன்ஸ் நிறுவனம், விவசாயிகளுக்கு அதிகாரம் வழங்குவதில் ரிலையன்ஸ் அக்கரை செலுத்தும் என்றும் ஒப்பந்த விவசாயத்திலும் ஈடுபடப்போவதில்லை; அப்படி ஈடுபடும் எதிர்காலத் திட்டமும் இல்லை, எந்த நிலத்தையும் வாங்கவும் போவதில்லை எனக் குறிப்பிட்டுள்ளது.

ஒப்பந்த விவசாயத்தில் ரிலையன்ஸ் ஈடுபடப்போவதாகவும் புதிய விவசாயச்சட்டங்களின் பயன்களை ரிலையன்ஸ் முழுவதும் அனுபவிப்பதாகவும் எழுந்த தவறான செய்திகளினால் ரிலையன்ஸ் ஜியோவுக்குச் சொந்தமான 1,500 கைப்பேசி கோபுரங்கள் தாக்கப்பட்டன.

இந்தத் தாக்குதலுக்கு பின்னணியில் சில வர்த்தகப் போட்டி நிறுவனங்களும் இருப்பதாக ரிலையன்ஸ் கருதுகிறது என்று அந்த நிறுவனம் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ABOUT THE AUTHOR

...view details