மும்பை: ரிலையன்ஸ் நிறுவனத்தின் நிறுவனத் தலைவரும், இந்தியாவில் மிகப் பெரிய பணக்காரருமான முகேஷ் அம்பானிக்கு மின்னஞ்சல் மூலமாக கொலை மிரட்டல் வந்துள்ளது. இவ்வாறு முகேஷ் அம்பானிக்கு வந்த மின்னஞ்சலில், ரூ.20 கோடி கொடுக்க வேண்டும், இல்லை என்றால் இந்தியாவில் மிகத் திறமையான துப்பாக்கிச் சுடுபவர்கள் உள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலக அளவில் மிகப்பெரிய தொழிலதிபரும், இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவருமான முகேஷ் அம்பானிக்கு வந்துள்ள கொலை மிரட்டல் சம்பவம் இந்தியாவிலுள்ள தொழில்துறை வட்டாரங்களில் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், இந்த கொலை மிரட்டல் சம்பந்தமாக முகேஷ் அம்பானி தரப்பில், காவல்துறையில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. முகேஷ் அம்பானியின் புகாரின் பேரில், மும்பை காம தேவி காவல் நிலையத்தில் பிரிவு 387 மற்றும் 562 என இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், கொலை மிரட்டல் விடுத்த நபர் குறித்து காம தேவி காவல் துறையினர் தனிப்பிரிவு அமைத்து மிரட்டல் விடுத்த அடையாளம் தெரியாத நபர் குறித்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.